back to top
13.5 C
London
Monday, October 5, 2026
No menu items!
Homeஉலகம்Flydubai Incident : 180 பேரையும் காவு வாங்க திட்டம் ? ஓமன் துணை விமானியின்...

Flydubai Incident : 180 பேரையும் காவு வாங்க திட்டம் ? ஓமன் துணை விமானியின் சதி அம்பலம்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி பறந்துகொண்டிருந்த flydubai பயணிகள் விமானத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றி, அதை திட்டமிட்டு மோதச் செய்ய துணை விமானி முயன்றதாக வெளியாகியுள்ள தகவல்கள், இந்த சம்பவத்தை சாதாரண விமானப் பிரச்சினையைத் தாண்டி பெரும் பாதுகாப்பு விவகாரமாக மாற்றியுள்ளது.

விமானம் நடுவானில் இருந்தபோது ஏற்பட்ட இந்த சம்பவத்தில், இந்திய கேப்டன் மீது துணை விமானி தாக்குதல் நடத்தியதாகவும், அதன்பின்னர் விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சியின் பின்னணியில் மிகப்பெரிய தாக்குதல் திட்டம் இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

180 பேருடன் டெல் அவிவ் நோக்கி பறந்த விமானம் :

செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி flydubai விமானம் புறப்பட்டது. Boeing 737 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தில் 174 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 180 பேர் பயணித்தனர்.

விமானத்தை இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் இயக்கியதாகவும், ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி துணை விமானியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விமானம் திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், காக்பிட் பகுதியில் எதிர்பாராத வகையில் பதற்றமான சூழல் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பிரார்த்தனை செய்ய வேண்டும்’ எனக் கூறி தாக்குதல் ?

விமானத்தின் நடுவானப் பயணத்தின்போது, பிரார்த்தனை செய்யப் போவதாக கூறிவிட்டு கேப்டன் இருந்த பகுதிக்குச் சென்ற ஹம்மாமி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமானத்தின் கட்டுப்பாட்டை தனது வசப்படுத்த அவர் முயன்றதாகவும், இதனால் காக்பிட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் எதிர்த்து போராடியதாக கூறப்படுகிறது. இதுவே அடுத்த சில நிமிடங்களில் நிகழவிருந்த மிகப்பெரிய அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது.

9/11 பாணியில் தாக்குதல் நடத்த திட்டமா ?

விமானத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக கைப்பற்றிய பின்னர், டெல் அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டிடத்தை நோக்கி விமானத்தை மோதச் செய்வது ஹம்மாமியின் திட்டமாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், விசாரணையில் பரிசீலிக்கப்படும் ஒரு முக்கிய கோணமாக இது பார்க்கப்படுகிறது. இந்த சாத்தியம் காரணமாக, அமெரிக்காவின் 9/11 இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்துடன் ஒப்பீடுகளும் எழுந்துள்ளன.

ஒரு பயணிகள் விமானத்தை ஆயுதமாக பயன்படுத்தும் வகையிலான திட்டம் உண்மையாக இருந்ததா என்பது தற்போது விசாரணையின் முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.

திட்டம் தோல்வியடைந்ததும் வேறு முயற்சியா ?

கேப்டன் ஸ்மித் மச்சார் எதிர்த்து போராடியதால் விமானத்தின் முழுமையான கட்டுப்பாட்டை ஹம்மாமியால் கைப்பற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, டெல் அவிவ் நகரை நோக்கிய ஆரம்பத் திட்டத்தை கைவிட்டு, விமானத்தை வேறு இடத்தில் மோதச் செய்ய முயன்றிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பாலைவனப் பகுதியில் விமானத்தை தரையிறக்குவது அல்லது மோதச் செய்வது தொடர்பான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற கோணமும் விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது.

வெறும் 30 விநாடிகளில் 16 ஆயிரம் அடி சரிவு !

இந்த சம்பவத்தின் போது விமானத்தின் உயரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் தற்போது விசாரணையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விமானத்தின் ஆட்டோபைலட் அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் விமானம் கீழ்நோக்கி செலுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக விமானம் சுமார் 30 விநாடிகளில் 16 ஆயிரம் அடி வரை கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.

இவ்வளவு குறுகிய நேரத்தில் விமானம் மிகப்பெரிய அளவில் உயரத்தை இழந்தது, அதில் இருந்த பயணிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம். விமானத்தில் அவசரகால விளக்குகள் எரிந்ததாகக் கூறப்படும் வீடியோக்களும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

விமானத்தின் என்ஜினும் நிறுத்தப்பட்டதா ?

விமானம் திடீரென உயரத்தை இழந்தது மட்டுமின்றி, அதன் என்ஜின் செயல்பாட்டிலும் தலையீடு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனினும், என்ஜின் உண்மையில் திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா அல்லது விமானத்தின் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட வேறு கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இதுதொடர்பான விமானத் தரவுகள், காக்பிட் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலை :

விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த கேப்டன் மற்றும் அங்கிருந்தவர்கள் இணைந்து ஹம்மாமியை கட்டுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து விமானத்தின் கட்டுப்பாடு மீண்டும் கேப்டனிடம் வந்ததாகவும், பின்னர் விமானம் சவுதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தரையிறங்கிய பின்னர் ஹமாம் அல் ஹம்மாமி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘பயங்கரவாத செயல்’ என்ற கோணத்தில் விசாரணை :

இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, டெல் அவிவ் நோக்கி செல்லும் சர்வதேச பயணிகள் விமானத்தில் ஹம்மாமி துணை விமானியாக பணியாற்றுவதற்கான அனுமதியை எவ்வாறு பெற்றார்? அவரது பின்னணி என்ன? விமானத்தை கைப்பற்றுவதற்கான முன்கூட்டிய திட்டம் ஏதேனும் இருந்ததா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன.

விமானத்தை மோதச் செய்வது அவரது உண்மையான நோக்கமாக இருந்ததா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here