Home அரசியல் மகன் கொடுத்த அழுத்தம்….ஈபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த செம்மலை? – Kumudam

மகன் கொடுத்த அழுத்தம்….ஈபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த செம்மலை? – Kumudam

0


செம்மலை யார்?

1980ம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1984,2001,2016 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டசபைக்கும், 2009 ம் ஆண்டு சேலம் லோக்சபா தொகுதியில் இருந்து எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டவர். அதிமுகவில் முக்கியமானவராகவும், எடப்பாடியாரின் தீவிர ஆதரவாளராகவும்  திகழ்ந்த நிலையில், மே மாதம் 18 ஆம் தேதி அதிமுகவிலிருந்து விலகினார்.

அதிமுகவிலிருந்து விலகல்

செம்மலை அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாகவும், தலைமையின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவும் விலகுகிறேன் என்று, இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கூறியாதாவது, சமீபத்திய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் நடந்து வரும் நிகழ்வுகள் தனக்கு வேதனையளிப்பதாகக் கூறினார். “முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இந்தக் கட்சியை எப்படிப் பாதுகாத்தார் என்பது மக்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது, அதிமுக பலவீனமாகிவிட்டது, மேலும் அதை வலுப்படுத்த கட்சியில் யாருக்கும் போதுமான அக்கறை இல்லை.”

அதிமுக துவங்கிய காலத்தில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பயணித்தவன். எனவே, இந்த இயக்கத்தில் இன்று வேதனையோடு, கனத்த இதயத்தோடு, கட்சியின் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுகிறேன் என்று சொன்னால், இரு மாபெரும் ஆளுமைமிக்க தலைவர்களின் ஆன்மாக்களுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்து, ‘கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா…மனசு நோகுதய்யா…’ என வேதனைப்பட்டு அறிக்கை வெளியிட்டு அதிமுகவிலிருந்து விலகினார். அதன்பிறகு சில வாரங்கள் நிம்மதியாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். ‘இனிமே அரசியல்ல ஈடுபடுற ஆர்வமெல்லாம் இல்லங்க…’ என்றே நெருங்கியவர்களிடமும் பகிர்ந்திருக்கிறார்.  

தவெகவில் இணையப் போகிறாரா செம்மலை? 

கடந்த மே மாதத்தில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, இன்று தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து செம்மலை நெருங்கியவர்களிடம் கேட்டபோது, ‘செம்மலை எம்.ஜி.ஆர் காலத்து அதிமுகக்காரர். கட்சியின் முக்கிய சீனியர். ஓ.பி.எஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்கு ஆதரவாக வந்த எம்.எல்.ஏக்களில் ஒருவர். பின்னர் எடப்பாடி அணிக்கே திரும்பிவிட்டார்.

அதிமுகவில் பெரியளவில் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவும் தவெகவும் அவருக்கு மாறி மாறி வலைவிரித்தனர். செம்மலை எல்லாரிடமும் பேசினார். ஆனால், அதிமுகவிலிருந்து விலகி இன்னொரு கட்சியில் இணைவதை அவர் விரும்பவில்லை. அதனால் வந்த ஆஃபர்கள் எதையும் அவர் ஏற்கவில்லை.

மகனின் ஆசையை நிறைவேற்றுவாரா செம்மலை?

அதிமுகவில் விலகி தவெகவில் இணைய வேண்டுமென மகனின் விருப்பம். அதற்காக அவர் சிலர் மூலம்  தூதுவிட்டும் பார்த்திருக்கிறார். சேலத்து அமைச்சரான பார்த்திபனை அடிக்கடி சந்தித்து கட்சியில் இணைவதைப் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், தவெக தலைமை செம்மலையின் மகனை மட்டும் கட்சியில் இணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை. செம்மலையோடு வந்தால் எம்.ஜி.ஆர் காலத்து அதிமுகக்காரர் விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆராக பார்த்து கட்சியில் இணைகிறார் என்கிற இமேஜை உண்டாக்கலாம் என நினைக்கிறது.

செம்மலைக்கு இதில் உடன்பாடில்லை. ஒருவேளை செம்மலை இன்று தவெகவில் இணைந்தால், அது மகனின் விருப்பத்துக்காகவும் எதிர்காலத்துக்காகவும் மட்டுமே இருக்கும்’ என்றனர்.

வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும்   தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், குறிப்பாக ஆளுந்தரப்பு இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி வாகையை சூட வேண்டும் என்பதில் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், இச்சமயத்தில் செம்மலை தவெகவில் இணைந்தால் தாராபுரத்தில் சமூகரீதியாக சில கணக்குகள் தங்களுககு சாதமாக மாறும் என தவெக தலைமை நம்புகிறது. சமூகக் கணக்குகளை மனதில் வைத்துதான் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வந்த மடத்துக்குளம் மகேந்திரனுக்கும் மாவட்டச் செயலாளர் பதவியை கொடுத்திருந்தனர். 

செம்மலை தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளதால், அந்த இடத்திற்கு செம்மலை வருகை புரிந்துள்ளார். ஒருவேளை தவெகவில் இணையகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version