Home தமிழ்நாடு தாய்மாமன் திட்டத்தில் 89,955 தங்க மோதிரங்கள் READY……ஜோய் ஆலுக்காஸின் MASS பங்களிப்பு!  – Kumudam

தாய்மாமன் திட்டத்தில் 89,955 தங்க மோதிரங்கள் READY……ஜோய் ஆலுக்காஸின் MASS பங்களிப்பு!  – Kumudam

0


தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில்,ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் முக்கிய பங்களிப்பை செய்துள்ளது. 

இத்திட்டத்திற்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 89,955 தங்க மோதிரங்களையும் தயாரித்து வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை விளக்கும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றையும் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

89,955 தங்க மோதிரங்கள்:

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சார்பில் தங்க மோதிரம் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு 89,955 மோதிரங்கள் தயாரிக்கும் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தப் பணியை நிறுவனம் தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 89,955 மோதிரங்கள், அதிக எண்ணிக்கையில் பிரசவங்கள் நடைபெறும் 107 அரசு தாய்சேய் நல மையங்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஒரு கிராம்… 22 கேரட் தூய்மை!

அரசு நிர்ணயித்துள்ள தரத்தின்படி, ஒவ்வொரு மோதிரமும் ஒரு கிராம் எடையிலும், 22 கேரட் தூய்மையிலும் துல்லியமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளது.

மோதிரங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மோதிரத்திலும் BIS அக்மார்க் முத்திரையுடன் ஆறு இலக்க HUID எண் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான அடையாளம் மற்றும் தர உறுதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து செலவுகளுக்கும் வெறும் ஒரு பைசா!

இந்தத் திட்டத்திற்காக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாகவும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. செய்கூலி, BIS அக்மார்க் முத்திரை, காப்பீடு, போக்குவரத்து மற்றும் பேக்கிங் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து வெறும் ஒரு பைசா மட்டுமே கட்டணமாக வசூலிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தங்க மோதிரங்களை அரசு நிர்ணயித்த தரம் மற்றும் அளவுகளுக்கு ஏற்ப தயாரித்து வழங்கும் பணியில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தனது பங்களிப்பை செய்துள்ளது.

“இந்தத் திட்டத்தில் இணைந்திருப்பது பெருமை”

இதுகுறித்து ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், “இந்த உன்னதமான திட்டத்தில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தங்க மோதிரங்களை தயாரிக்கும் பணியில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version