Home சினிமா சாதிய தடைகளைத் தாண்டி செஸ் களத்தில் சிறுவன்… ‘கிராண்ட் மாஸ்டர்’ எப்படி? – Kumudam

சாதிய தடைகளைத் தாண்டி செஸ் களத்தில் சிறுவன்… ‘கிராண்ட் மாஸ்டர்’ எப்படி? – Kumudam

0



துப்புரவு பணியாளரான அபர்ணதி தன் மகனை அரசு பள்ளியில் படிக்க வைத்து, அவனை ஒரு வக்கீலாக்க வேண்டும் என்று நினைக்கிறாள். தனி மனுஷியாக அதற்காக வாழ்க்கையோடு போராடுகிறாள்… பல அவமானங்களை சந்திக்கிறாள். 

ஆனால் அவள் மகனுக்கு வக்கீல் ஆவதை விட செஸ்ஸில் ஒரு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்று ஆசை… ஆனால் அவனது பள்ளி ஆசிரியர் குப்பை காரி மகனுக்கு எதுக்கு செஸ் என்று சிறுவனை அவமானப்படுத்துகிறார்… அதையும் மீறி அவன் தன் திறமையை எப்படி நிரூபிக்கிறான் என்பதுதான் கதை.

 

படம் முழுக்க சாதிய சாடல்கள் இருந்தாலும் இயக்குநர் வெற்றிச் செழியன் அதற்கான நியாயத்தையும் படத்தில் வைத்திருக்கிறார்… மொத்தப் படத்தையும் தன் தோளில் சுமக்கும் அபர்ணதியின் நடிப்பு மாபெரும் வியப்பு… அவரது மகனாக வரும் சிறுவனும் மிக இயல்பாக நடித்திருக்கிறான். வில்லனாக வரும் சுரேஷ் மேனன், மற்றும் லிங்கேஷ் கேரக்டர்களுக்குப் பொருத்தம்… ஒளிப்பதிவு, இசை கதையை சிதைக்காமல் கச்சிதமாக அமைந்திருக்கிறது…

வகுப்பறையில் தன் மகனை அனுமதிக்காத ஆசிரியரிடம் அபர்ணதி சண்டை போடும் காட்சி சபாஷ். குப்பை வண்டியில்  மகனுடன்  போகும் பொழுது அவர் அவனுக்கு செஸ் கற்றுக்கொடுப்பது அழகு…  

 

இப்படி பாராட்ட நிறைய விஷயங்கள் இருந்தாலும்… தன் புருஷனை கொன்ற பணக்கார வில்லன் மீது நாயகி காவல்துறையில் ஒரு புகார் கூட கொடுக்காதது, இரண்டே நாளில் அபர்ணதி செஸ் கற்றுக்கொள்வது, திடீரென் மகனுடன் பென்ஸ் காரில் வந்து இறங்குவது, ஒரு சிறுவனால் தன் செஸ் சாம்ராஜ்யமே சரிந்து விடும் என்று ஒரு பெரிய தொழிலதிபர் பதறுவது…  என நிறைய லாஜிக்கல் நெருடல்…

 

கிராண்ட் மாஸ்டர் – ஓபனிங் சூப்பர், முடிவு சுமார்

3 ஸ்டார்

(இளையரவி)



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version