back to top
25.2 C
London
Tuesday, September 22, 2026
No menu items!
Homeஅரசியல்ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு... பதிலடி கொடுத்த M.K.S! - Kumudam

ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு… பதிலடி கொடுத்த M.K.S! – Kumudam

Date:

Related stories

ஜேசுதாஸ் குரலில் பூத்த குறிஞ்சி… 50 ஆண்டுகளாக மணக்கும் பாடல்!

‘டாக்டர் சிவா’ படத்தின் ‘மலரே குறிஞ்சி மலரே’ பாடல், எம்.எஸ்.விஸ்வநாதன்...

ஜெயிலர் 2 vs ஓம் : முன்னாள் மாமனாரின் படத்துடன் போட்டியா? ரிலீஸ் ரேஸில் ட்விஸ்ட்!

முன்னாள் மாமனாரின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்க...

முதலமைச்சர் நிகழ்வு… குழந்தைகளையும் விட்டுவைக்காத சோதனை?

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்...
spot_imgspot_img



போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜான் பிரிட்டோவுக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் தொடர்பு இருப்பதாக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவுகளுக்கு எதிராக, ஆதவ் அர்ஜுனா சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக ஐடி விங் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே சமூக வலைதள பதிவு வெளியிடப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், “ஜான் பிரிட்டோ என்பவர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் இல்லை என்றால் அதனை மனுவில் அவர் தெளிவுபடுத்தவில்லை. போதைப்பொருள் வழக்கு தொடர்பான தகவல்களை சுட்டிக்காட்டியதை அவதூறாக கருத முடியாது” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் சிலர் மீது வழக்குகள் இருப்பதாகவும், அவரும் சில சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதால், அவர் நீதிமன்றத்தை “சுத்தமான கரங்களுடன் அணுகவில்லை” என்றும் ஸ்டாலின் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், திமுக தலைவர் என்ற முறையில் கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாக செயல்பாடுகளுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளதாகவும், சமூக வலைதளங்களில் உறுப்பினர்கள் வெளியிடும் தனிப்பட்ட பதிவுகளுக்கு தன்னை பொறுப்பாக்க முடியாது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகவோ, ஜான் பிரிட்டோவை ஆதவ் அர்ஜுனாவுடன் தொடர்புபடுத்தியோ பதிவுகளை வெளியிடுமாறு திமுக ஐடி விங்கிற்கு எந்த உத்தரவும் வழங்கவில்லை என்றும் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதவ் அர்ஜுனா தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறுவதற்கு போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, திமுக ஐடி விங் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் அக்டோபர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here