back to top
12.6 C
London
Monday, September 21, 2026
No menu items!
Homeதமிழ்நாடுமழை பாதிப்பை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள்? ACTION MODE-ல் முதலமைச்சர் விஜய் ! - Kumudam

மழை பாதிப்பை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள்? ACTION MODE-ல் முதலமைச்சர் விஜய் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பருவமழை பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகள் :

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் கனமழை, வெள்ளம், நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அரசு சார்பில் முன்கூட்டியே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நடப்பு ஆண்டின் வடகிழக்கு பருவமழையை சீராக எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று பகல் 12 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு :

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

நீர்நிலைகள் பராமரிப்பு பணிகள் :

வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாருதல், நீர் செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றுதல், ஆகாயத்தாமரை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளன.

மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க உத்தரவு :

மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான உபகரணங்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து அங்கு மீட்பு குழுக்களை பணியில் ஈடுபடுத்துதல், நிவாரண முகாம்களில் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
 
பருவமழையை எதிர்கொள்ள புதிய உத்தரவுகள் :

வடகிழக்கு பருவமழையை பாதுகாப்பாக எதிர்கொள்ள தேவையான அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

மேலும், மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here