back to top
12.6 C
London
Monday, September 21, 2026
No menu items!
Homeசினிமாஅம்பிகா மீது பாய்ந்த பண மோசடி வழக்கு...கேஸ் போட்டதே தங்கச்சி ராதா தான்? - Kumudam

அம்பிகா மீது பாய்ந்த பண மோசடி வழக்கு…கேஸ் போட்டதே தங்கச்சி ராதா தான்? – Kumudam

Date:

Related stories

அமைச்சராகும் சௌமியா அன்புமணி? இடைத்தேர்தலுக்குப் பிறகு நடக்கப்போகும் ட்விஸ்ட்!

இடைத்தேர்தலுக்குப் பிறகு, தவெகவுடன் பாமக கூட்டணி வைப்பதாகவும், சௌமியா...

"அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்" – ஈரான்! ஆனால் 7 கண்டிஷன்கள் !

அமெரிக்காவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்,...

இடைத்தேர்தல் அரசியல் சூடு… பா.ம.க.வின் முடிவில் மாறும் கணக்குகள்!

இரு தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு...
spot_imgspot_img



தமிழ் சினிமாவில் நடிகை ராதா,தனது சகோதரியும் நடிகையுமான அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் காசோலை மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் திறந்து வைத்த ஸ்டூடியோ தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது புகார் அளிக்கும் அளவுக்கு சென்றுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரையுலகில் சாதித்த சகோதரிகள்

தமிழ் திரையுலகில் சகோதர, சகோதரிகள் இணைந்து நுழைவது அரிது. அதிலும் இருவரும் வெற்றி பெறுவது மிகவும் அரிதான ஒன்று. அந்த வகையில் திரைத்துறையில் நுழைந்து வெற்றி பெற்றவர்கள் அம்பிகா – ராதா சகோதரிகள்.

1979-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அம்பிகா. தொடர்ந்து அவரது தங்கையான ராதா, பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அம்பிகா நடித்த ‘சக்களத்தி’ திரைப்படமும், ராதா நடித்த ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் இந்த சகோதரிகளின் ஆதிக்கம் இருந்தது.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்தனர்.

எம்.ஜி.ஆர் திறந்து வைத்த ஏஆர்எஸ் கார்டன்

இதற்கிடையே, சென்னைக்கு அருகே ‘ஏஆர்எஸ் கார்டன்’ என்ற பெயரில் ஸ்டூடியோ ஒன்றை அம்பிகா – ராதா சகோதரிகள் தொடங்கினர். அம்பிகா, ராதா மற்றும் அவர்களின் தாய் சரஸ்வம்மா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துகளை இணைத்து இந்தப் பெயர் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஸ்டூடியோவை அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் திறந்து வைத்தார். அந்த நிலம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் மற்றும் கருத்துகள் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றன.

ரூ.46 கோடி மோசடி புகார்

இந்நிலையில், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா தனது சகோரியான நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மீது ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில்,

ஒரே இல்லத்தில் வசித்த போது நடிகை ராதாவின் 5 செக்குகளை நடிகை அம்பிகை மற்றும் சகோதரர் ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது. இத்தகவல் ராதாவிற்கு தெரியவந்ததும் வங்கி கணக்குகளை சோதனை செய்து பார்த்த போது 5 செக்குகளில் ரூ.46 கோடி அளவில் செக் மோசடி நடந்துள்ளது முழுமையாக தெரியவந்துள்ளது.

செக் மோசடி தொடர்பாக நடிகை ராதா நேரடியாக சென்னை காவல் ஆணையத்தில் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஆர்எஸ் கார்டன் விவகாரத்தில் கருத்து வேறுபாடு?

40 ஆண்டுகளுக்கும் மேலாக இணைபிரியாத சகோதரிகளாக வலம் வந்த அம்பிகா – ராதா இடையே தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஸ்டூடியோவாக செயல்பட்டு வரும் ஏஆர்எஸ் கார்டனில் திரைப்படங்கள் மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த சொத்தில் சகோதரிகள் மற்றும் அவர்களது தாயாருக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

தாயாரின் பங்கு தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், ஒரு தரப்பு அதனை விற்பனை செய்ய முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அந்த நிலம் விற்பனைக்கு இல்லை என இரு தரப்பினரும் மாறி மாறி அறிவிப்பு பலகைகளை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் காவல் ஆணையர் அலுவலகம் வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here