back to top
20.8 C
London
Saturday, September 19, 2026
No menu items!
Homeசினிமாதிரை விமர்சனம்:  தி டார்க் ஹெவன்...! - Kumudam

திரை விமர்சனம்:  தி டார்க் ஹெவன்…! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


ஒரு மலை கிராமம். அங்கு ஒரு குறிப்பிட்ட மாதத்தில் தொடர்ச்சியாக பல மரணங்கள் நிகழ்கின்றன. அதற்கு ஒரு பெண்ணின் சாபம் தான் காரணம் என கிராமத்து மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக ஒரு பழைய டைரி போன்ற புத்தகம் இருக்கிறது. அதில் என்ன எழுதியிருக்கிறதோ அதெல்லாம்  அந்த கிராமத்தில் அப்படியே நடக்கிறது…

இந்த சூழ்நிலையில் அந்தக் கிராமத்திற்கு தன் குடும்பத்துடன் ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறார்… அவர் வந்த பின் ஒரு காதல் ஜோடி உட்பட சில தொடர் கொலைகள் நடக்கின்றன்… ஒரு சைகோ கில்லர் தான் அந்தக் கொலைகளை செய்வதாக மக்கள் நம்புகின்றனர். அந்த  நேரத்தில் இன்ஸ்பெக்டர் மனைவியும் இறந்துபோக, இறுதியில் கொலைகாரனை அந்த இன்ஸ்பெக்டர் எப்படி கண்டுபிடித்தார்? அவன் யார்? ஏன் அந்தக் கொலைகளை செய்தான் என்பதுதான் கிளைமாக்ஸ்.

காட்சிகள் ஒவ்வொன்றும் திகில், ஏகப்பட்ட ட்விஸ்ட்…  உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்த லேடி கான்ஸ்டபிள், தன் அப்பாவை கொலைகாரனிடமிருந்து காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் திக் திக்… ஹீரோ சித்து, ஹீரோயின் தர்ஸிகா, மற்றும் ரித்விகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், ஜானகிராமன் கேரக்டர்களும் நடிப்பும் சிறப்பு . ஒளிப்பதிவு, இசை மிரட்டல்…

கிளைமேக்ஸில் வில்லனை நெருங்கிய ஹீரோ மனைவி, மகனை நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பது நெருடல்..

 திகில், திருப்பங்கள், தொடர் கொலைகள் என ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பை கூட்டும் ‘தி டார்க் ஹெவன்’!  



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here