back to top
20.4 C
London
Thursday, September 17, 2026
No menu items!
Homeஅரசியல்மோடிக்கு வாழ்த்து... பெரியாருக்கு புகழ்ச்சி... வைரலாகும் அண்ணாமலை ட்வீட்..! - Kumudam

மோடிக்கு வாழ்த்து… பெரியாருக்கு புகழ்ச்சி… வைரலாகும் அண்ணாமலை ட்வீட்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “Heartiest birthday greetings to our Hon. PM Thiru Narendra Modi avl.” என வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்காக மோடி மேற்கொண்டு வரும் பணிகள், அவரது தலைமைத்துவம் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் முன்னேற்ற வேண்டும் என்ற முயற்சிகள் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் எனவும் அண்ணாமலை வாழ்த்தியுள்ளார்.

பெரியாரை புகழ்ந்த அண்ணாமலை

இதற்கிடையே, இன்று பெரியாரின் பிறந்தநாளும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு பதிவுதான் தற்போது அரசியல் ரீதியாக பேசுபொருளாகியுள்ளது.

அதில், “சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பெரியார் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவிட்டதாகவும், அவரது பொதுவாழ்வை நினைவுகூர்ந்து வணங்குவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, 2020-ல் பாஜகவில் இணைந்தார். பின்னர் தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்த அவர், தமிழ்நாடு அரசியலில் பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவராக உருவெடுத்தார். பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்த காலகட்டத்தில் திமுக உள்ளிட்ட திராவிட இயக்க அரசியலை கடுமையாக விமர்சித்து வந்த அண்ணாமலை, பெரியார் தொடர்பான விவகாரங்களிலும் தனது கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகி ‘We The Leaders’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, தற்போது பெரியாரின் சமூக சீர்திருத்தப் பங்களிப்பை குறிப்பிட்டு பதிவிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. 

ஒரே நாளில் மோடிக்கு பாராட்டு… பெரியாருக்கு புகழ்ச்சி என அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த இரண்டு பதிவுகளும் தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here