மூலனூர் கார்த்திக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார். ‘மூ ரித்தீஷ் பிடிபடும் வரை அவருக்கு ஜாமின் கொடுக்கக்கூடாது’ என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதாடிய செய்தியைப் படித்தபோதுதான், ‘யாருப்பா இந்த மூலனூர் கார்த்தி?’ என்று தி.மு.க.வின் சீனியர்களே அவரது பின்னணி குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
மூலனூர் அருகேயுள்ள கன்னிவாடியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம், “கரூர் கேங்கின் லீடராக மூலனூர் கார்த்தி உருவானது எப்படி என்பதை விவரித்தார். “திருப்பூர் மாவட்டம், மூலனூர் அருகேயுள்ள கிலாங்குண்டல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கல்பட்டியைச் சேர்ந்த கார்த்தி, ஆரம்பத்தில் தினமும் கரூருக்கு வந்து சிறிய அளவில் ஃபைனான்ஸ் செய்துகொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மூலனூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த இல.பத்மநாபன் திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். (இந்த இல.பத்மநாபன்தான் தற்போதைய தாராபுரம் இடைத்தேர்தலில் தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.)
சாதி பாசத்தால், பத்மநாபனிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட கார்த்தி, அதன்மூலம் 2019ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவி சுமதிக்கு தி.மு.க.வில் யூனியன் கவுன்சிலர் சீட் வாங்கி, கவுன்சிலர் ஆக்கினார். கட்சியில் எவ்வளவோ சீனியர்கள் இருக்க, பத்மநாபனின் துணையோடு, தன் மனைவியை மூலனூர் ஒன்றியச் சேர்மன் ஆக்கினார்.
அதைத் தொடர்ந்து, சேர்மனின் கணவர் என்கிற கெத்தோடு கார்த்தி தனது ஃபைனான்ஸ் தொழிலை கரூரில் விரிவுபடுத்தினார். வழக்கம்.இந்த சூழலில், 2021 தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே சென்னையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகனோடு நட்பாக பழகி, அவரின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்து பணம் கேட்டதாக தி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்தார்கள்.
டி.வி.யில் செய்தி ஒளிபரப்பான சில நிமிடங்களிலேயே கார்த்தி, தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து, காரில் அமர்ந்துகொண்டு, ‘அந்த கார்த்தி நான் அல்ல, என் மீது வழக்கு பதியவில்லை’ என்று வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவைப் பார்த்த கரூர், மூலனூர் வட்டார தொழிலதிபர்கள், ‘இவருக்கு இவ்வளவு செல்வாக்கா?’ என வாயடைத்துப்போனார்கள்.
அதன் பிறகே கரூர் கம்பெனியை ஆரம்பித்தார் கார்த்தி. செந்தில்பாலாஜி மின்சார துறையை கவனிப்பதிலேயே பெரும்பாலும் ஆர்வமாக இருந்ததால், ரித்தீஷின் ஆசியோடு டாஸ்மாக்கில் கால் பதித்தார் கார்த்தி. டாஸ்மாக்கின் எந்தெந்த மது ஆலைகளிலிருந்து சரக்குகளை வாங்குவது, யாருக்கு டெண்டர் வழங்குவது என அஃபிஷியல் நிர்வாகத்தை ரித்தீஷும், பார் ஏலம், அட்டைப்பெட்டி ஏலம், காலி பாட்டில் விவகாரங்கள், பணியாளர்கள் டிரான்ஸ்ஃபர் போன்ற லோக்கல் நிர்வாகத்தை கார்த்தியும் கவனித்துக்கொண்டார்கள்.
இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில், செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்ற ஓரிரு நாட்களிலேயே, கரூர் கோதை நகரில் உள்ள கார்த்தியின் வீட்டிலும், கோவை சாலையில் உள்ள ஹோட்டலிலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தார்கள். சென்னை எக்மோரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள். ரித்தீஷும், கார்த்தியும் சில நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ‘அப்பாடா’ என்ற பெருமூச்சுடன், ரித்தீஷும் கார்த்தியும் தலைமறைவு வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள்.
அதைத் தொடர்ந்து கரூருக்கு வந்த கார்த்தி, ‘ரித்தீஷின் உறவினர் ஒருவர் மத்திய அரசில் முக்கிய அதிகாரியாக இருக்கிறார். அவரால்தான் சோதனை நடத்தக் கூடாது என்கிற உத்தரவை நம்மால் வாங்க முடிந்தது. இனிமேல் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. வழக்கம்போல் கரூர் கம்பெனியை மீண்டும் செயல்படுத்தலாம்’ என்று சொல்லவே, சில மாதங்கள் கிடப்பில் கிடந்த கரூர் கம்பெனி மீண்டும் உயிர் பெற்றது.
அப்போது, துறை அமைச்சரான ஈரோடு முத்துச்சாமியை சந்தித்த கார்த்தி, ‘ரித்தீஷ் தலைமைக்கு வேண்டப்பட்டவர், எனக்கு ரித்தீஷ் வேண்டப்பட்டவர். உங்களுக்கு அமைச்சர் பதவி பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்’ என்று அன்பு கட்டளையிட்டார். இதனால், முத்துசாமி LD 60T உளைச்சல் அடைந்தாலும், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. செய்ய முடியவில்லை.
இதுபோன்ற காரணங்களால்தான், ஒரு பிரஸ்மீட்டில் அமைச்சர் முத்துசாமி ‘காலையில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடல் வலியை போக்க குடிப்பது தவறில்லை’ என்று கோபமாக பேசும் அளவிற்கு தள்ளப்பட்டார். இதற்கிடையே, என்னதான் ஆளுங்கட்சி செல்வாக்கு இருந்தாலும் கரூரில் அவ்வப் போது அமலாக்கத்துறையின் சோதனை நடந்துகொண்டேதான் இருந்தது.
மாவட்ட அளவில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுத்திருந்த நபர்களின் பட்டியல்களை கையில் வைத்துக்கொண்டு கரூர், வேடசந்தூர் பகுதிகளில் அமலாக்கத்துறை அடிக்கடி சோதனை நடத்தியது. அந்தச் சூழலில், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற பயம் அனைவருக்கும் வந்தது.இல்லாமல் இருக்க வேண்டும். அதனால் எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும்’ என்று அன்பு கட்டளையிட்டார்.
இதனால், முத்துசாமி மன உளைச்சல் அடைந்தாலும், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. செய்ய முடியவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான். ஒரு பிரஸ்மீட்டில் அமைச்சர் முத்துசாமி ‘காலையில் மது அருந்துபவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடல் வலியை போக்க குடிப்பது தவறில்லை’ என்று கோபமாக பேசும் அளவிற்கு தள்ளப்பட்டார்.
இதற்கிடையே, என்னதான் ஆளுங்கட்சி செல்வாக்கு இருந்தாலும் கரூரில் அவ்வப் போது அமலாக்கத்துறையின் சோதனை நடந்துகொண்டேதான் இருந்தது. மாவட்ட அளவில் டாஸ்மாக் பார்களை ஏலம் எடுத்திருந்த நபர்களின் பட்டியல்களை கையில் வைத்துக்கொண்டு கரூர், வேடசந்தூர் பகுதிகளில் அமலாக்கத்துறை அடிக்கடி சோதனை நடத்தியது. அந்தச் சூழலில், எப்போது வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற பயம் அனைவருக்கும் வந்தது.அதைத் தொடர்ந்து, பணம் கொடுத்திருந்த ஃபைனான்சியர்கள் கார்த்தியிடம், ‘எங்களுக்கு பார் வேண்டாம். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பித் தாருங்கள்’ என்று நச்சரித்தார்கள்.
பணம் கொடுக்க மறுத்த கார்த்தி, அனைவரையும் அரவக்குறிச்சி அருகே உள்ள மாமரத்துப்பட்டியில் இருந்து வடக்கே, ஆள் அரவமில்லாத கல்லுமடை புதூர் பண்ணை வீட்டிற்கு வரவழைத்தார், இந்தப் பண்ணை வீட்டில்தான் முன்ஜாமின் தலைமறைவு, அரசியல் தலைமறைவு, அமலாக்கத்துறை தலைமறைவு என எந்தவொரு தலைமறைவு வாழ்க்கை வாழ நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும் கார்த்தி அடைக்கலம் கொடுப்பதுண்டு.
எந்த தொந்தரவும் இல்லாமல் சுகபோக வாழ்க்கை வாழும் அளவுக்கு அந்தப் பண்ணை வீட்டில் ‘அத்தனை’ மற்றும் ‘அத்துணை’ வசதிகளும் உண்டு. இந்தப் பண்ணையில் எப்போதும் 50க்கும் மேற்பட்ட கட்டுச் சேவல்கள் மேய்ந்துகொண்டிருக்கும். சமையலுக்கு ஆள் இருந்துகொண்டே இருப்பார்கள். சொன்ன அரை மணி நேரத்தில், நாட்டுக்கோழி வறுவலும் இவர்களின் எவர்கிரீன் பிராண்ட் உ.பா.வும் தயாராக இருக்கும்.
அப்படியாகப்பட்ட அந்த பண்ணை வீட்டில்தான், தன்னிடம் பணம் கேட்ட ஃபைனான்சியர்களை விருந்துக்கு அழைத்திருந்தார் கார்த்தி, அனைவரும் கூடியதும் ‘ஷ்’ பிரமுகருக்கு போன் செய்திருக்கிறார் கார்த்தி. ஓபன் ஸ்பீக்கரில் பேசிய ‘ஷ்’ பிரமுகர், ‘இனி எந்த தொந்தரவும் இல்லாமல் தொழில் நடத்தலாம். தொழில் செய்வதாக இருந்தால் தொழில் செய்யுங்கள், பணம் எல்லாம் திருப்பித் தர முடியாது’ என்று ஓபனாக சொல்ல, கட்சித் தலைமைக்கு நெருக்கமான அந்த ‘ஷ்’ன் குரலைக் கேட்டு பணம் போட்ட ஃபைனான்சியர்கள் அத்தனை பேரும் நடுங்கிப் போனார்கள்.
அப்போது திருவள்ளூர் மாவட்டத்தை எடுத்திருந்த அப்போது திருவள்ளூர் மாவட்டத்தை எடுத்திருந்த கார்த்தியின் நட்பான தி.மு.க.வின் மூலனூர் நகரப் புள்ளி ஒருவர், ‘தேவையில்லாமல் பிரச்னை செய்ய வேண்டாம். பார்களை நடத்துங்கள், பாண்டிச்சேரி சரக்குக்கூட வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம்’ என்று உறுதி கொடுக்க, ‘ஏது, பாண்டிச்சேரி சரக்கு வித்துக்கலாமா?” என்று உற்சாகமடைந்த ஃபைனான்சியர்கள் அனைவரும் உ.பா. பாட்டிலின் மூடியைத் திருகி திறந்து, மிடறு மிடறாக விழுங்கத் தொடங்கினார்கள்…
(இன்னும் தலைசுற்றும்…)
(அரவிந்த்)





