Home சினிமா 80ஸ் த்ரிஷாவா அம்பிகா? எம்.ஜி.ஆரிடம் 25 ஏக்கர் நிலம் வாங்கினாரா? மீண்டும் வெடித்த சர்ச்சை..! –...

80ஸ் த்ரிஷாவா அம்பிகா? எம்.ஜி.ஆரிடம் 25 ஏக்கர் நிலம் வாங்கினாரா? மீண்டும் வெடித்த சர்ச்சை..! – Kumudam

0


நடிகை த்ரிஷா லண்டன் சென்றது தொடர்பாக ஆதரவாக பேசிய நடிகை அம்பிகாவை விமர்சித்து தனியார் யூடியூப் சேனலில் பத்திரிகையாளர் சேகுவேரா பேசி இருந்தார். 

த்ரிஷா தனது சொந்த வேலைக்காக லண்டன் சென்றிருக்கலாம் என்றும், அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, அவர் எப்போது லண்டன் சென்றார் என்பதற்கான தகவல்கள் தெரியவில்லை என்றும் அவர் கூறினார். த்ரிஷா எங்கு செல்கிறார், எங்கு இருக்கிறார் என்பது குறித்து மற்றவர்கள் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்ற கருத்தையும் சேகுவேரா குறிப்பிட்டார். அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை அம்பிகா பேசியதால் அது கூடுதல் கவனம் பெற்றதாக அவர் கூறினார்.

மேலும், “இன்று த்ரிஷா எந்த இடத்தில் இருக்கிறாரோ, அந்த இடத்தில் 80களில் இருந்தவர் அம்பிகா” என்றும் சேகுவேரா தனது பேச்சில் குறிப்பிட்டார்.

ஏ.ஆர்.எஸ் கார்டன் குறித்து சேகுவேரா எழுப்பிய கேள்வி

இதைத்தொடர்ந்து, அம்பிகா மற்றும் அவரது சகோதரி ராதாவுடன் தொடர்புடையதாக சேகுவேரா குறிப்பிட்ட ‘ஏ.ஆர்.எஸ் கார்டன்’ சொத்து குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த சொத்து அரசுக்குச் சொந்தமானது எனக் கூறிய சேகுவேரா, அது அம்பிகா–ராதா சகோதரிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசுவார்களா என கேள்வி எழுப்பினார். மேலும், அந்த சொத்தின் மதிப்பு பல கோடிகளில் இருந்து தற்போது ரூ.1,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் அவர் தனது பேச்சில் கூறினார்.

சேகுவேராவுக்கு அம்பிகா பதிலடி

சேகுவேராவின் இந்தக் கருத்துகளுக்கு அண்மையில் தனியார் யூடியுப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை அம்பிகா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். த்ரிஷா குறித்து தான் தெரிவித்த கருத்தை சேகுவேரா தவறான மற்றும் அசிங்கமான முறையில் விமர்சித்துள்ளதாக அம்பிகா கூறினார்.

தன்னை “80களின் த்ரிஷா” என சேகுவேரா குறிப்பிட்டது குறித்தும் அம்பிகா கேள்வி எழுப்பினார். “நான் 80களின் த்ரிஷா என்றால், அப்போது விஜய் யார்?” என அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தன்னிடம் 25 ஏக்கர் நிலம் இருப்பது தொடர்பாக சேகுவேரா முன்வைத்த கேள்விக்கும் அம்பிகா பதிலளித்தார். “எம்.ஜி.ஆர் எனக்கு 25 ஏக்கர் நிலம் கொடுத்தபோது, சேகுவேரா கிராம நிர்வாக அலுவலராக இருந்தாரா?” என அம்பிகா கேள்வி எழுப்பினார்.

மேலும், அந்த 25 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் சேகுவேராவிடமே இருப்பதாகவும் அம்பிகா குற்றம்சாட்டினார். முன்பு அவர் அளித்த வாக்குறுதியின்படி அந்த ஆவணங்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அம்பிகா தெரிவித்தார். அந்த நிலத்தை விற்றால், அதில் சேகுவேராவுக்கு உரிய பங்கை ஒரு சகோதரர் என்ற முறையில் வழங்குவேன் என்றும் அம்பிகா கூறியுள்ளார்.

இவ்வாறு, த்ரிஷாவுக்கு ஆதரவாக அம்பிகா தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து சேகுவேரா முன்வைத்த விமர்சனமும், அதற்கு அம்பிகா அளித்துள்ள பதிலும் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version