back to top
17.9 C
London
Monday, September 14, 2026
No menu items!
Homeஅரசியல்கரூர் கேங் Vs கட்சி கேங்... கரூர் கம்பெனி பற்றிய அதிர்ச்சி தகவல்கள்! - Kumudam

கரூர் கேங் Vs கட்சி கேங்… கரூர் கம்பெனி பற்றிய அதிர்ச்சி தகவல்கள்! – Kumudam

Date:

Related stories

"நடிகர், நடிகைகளை மட்டும்தான் பார்ப்பாரா ?" – கொதிக்கும் கூடங்குளம் போராளி…

15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் விஜய்யை...

லண்டன் டூ தாராபுரம்… கேப் விடாத விஜய்… கேண்டிடேட்டுக்காக சுடசுச பிரசாரம்..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் விஜய், அங்கு பணிகளை...

Mandaadi Movie Review : கரையில் கில்லாடி, கடலில் தள்ளாடி!

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி...

ED உடன் கைக்கோர்க்கும் விஜிலென்ஸ்? நேருவுக்கு ‘Double ட்ரபிள்’?

தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக வலம் வரும் கே.என். நேருவைச்...
spot_imgspot_img



தமிழக சட்டசபையில் சர்க்காரியா கமிஷனில் தொடங்கி, டாஸ்மாக் ரித்தீஷ் வரை தி.மு.க. மீது அடுக்கடுக்கான அணுகுண்டுகளை வீசியிருக்கிறார் முதல்வர் விஜய். குறிப்பாக, கரூர் கம்பெனியை, ‘கரூர் கேங்க்’ என அவர் அழைத்தது அகில இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த கரூர் கேங்க் எப்படி உருவானது, தமிழகம் முழுக்க அது எப்படி விரிவுபடுத்தப்பட்டு தனி அரசாங்கமாக மாறியது என அந்த டீமில் பணியாற்றிய செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் பகிரங்கமாக நமக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் தகவல்கள் இதோ…

கடந்த திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பதவியேற்றதும், ‘எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள்தான் சகலமும் செய்து கொடுக்கிறோம்’ என்று சொல்லியே பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு நெருக்கமானார் மூலனூர் கார்த்தி. தொடர்ந்து, தயாநிதி மாறனின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளராக பதவி வாங்கினார்.

கரூர் வட்டிக்காரர்கள் ரகசிய மீட்டிங்… மாவட்டங்களுக்கு தொகை நிர்ணயம்

பின்னர் டாஸ்மாக் மூலம் எப்படி பணம் குவிக்கலாம் என கரூரில் வட்டித் தொழில் செய்பவர்கள், ஃபைனான்சியர்கள் அடங்கிய குழுவைக் கூட்டி ரகசிய மீட்டிங்கை ஏற்பாடு செய்தார். அந்த மீட்டிங்கில் நாயுடு என அழைக்கக்கூடிய விழுப்புரம் ஃபைனான்சியர், ‘மதுக்கடைகளை அரசு நடத்தட்டும், பார்களை நாம் நடத்தலாம். மாவட்டவாரியாக ஏலம் விடலாம். ஒரே பேமென்ட்டில் மொத்தமாக யார் பணம் தருகிறார்களோ அவர்களுக்கு மாவட்டங்களை ஒதுக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தொகையை நிர்ணயிக்கலாம்’ என சொல்லி அந்த இடத்திலேயே மாவட்டத்திலுள்ள கடைகளின் எண்ணிக்கையை பொறுத்து தொகையை நிர்ணயித்தார்கள்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை அரவக்குறிச்சி அருகே உள்ள ஊத்துறை சேர்ந்த கேரளா ஃபைனான்சியர் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். விழுப்புரம் ஃபைனான்சியர் நாயுடு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை வாங்கினார். சக்கரையான அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை வாங்கினார்கள். செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை மூலனூர் கார்த்தி, அவரின் நண்பர் ரமேஷ் இருவரும் வைத்துக்கொண்டனர்.

சென்னை சிட்டியை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்தையும் விற்பனை செய்தார்கள். மாவட்டங்களை வாங்கியவர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளரை சந்தித்து, ‘மேலிட உத்தரவு மூலம் நாங்கள் வந்துள்ளோம். டாஸ்மாக் பார் முழுவதையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் பெயருக்கு அதிகாரிகளாக இருந்தால் போதும் என உத்தரவிட்டனர்.

பாட்டிலுக்கு பத்து ரூபாய்… நாயுடு போட்ட விஷ விதை!

இந்த நேரத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை எடுத்திருந்த விழுப்புரம் ஃபைனான்சியர் நாயுடு, ‘கரூர் கம்பெனியிலிருந்து பேசுகிறோம். பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வாங்க வேண்டும். ஒரு நாளைக்கு உங்கள் கடைகளில் 2,500 பாட்டில்கள் சேல்ஸ் ஆகின்றன. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் 2,500 பாட்டில்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வருகிறது. அதில் தினமும் 15 ஆயிரம் ரூபாய் எனக்குத் தர வேண்டும்’ என செல்போனில் பேசியதை அந்த விற்பனையாளர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். அந்த ஆடியோ தமிழகம் முழுக்க வைரலானது. இதனால் யார் இந்த கரூர் சும்பெனி?” என அரசியல் வட்டாரமே பரபரப்பானது.

ஒரு கடைக்கு 15 ஆயிரம் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 100 கடைகளில் ஒரே நாளில் 15 லட்சம் ரூபாய் பாட்டிலுக்கு பத்து ரூபாயில் மட்டுமே வருமானம் கொட்டும். ஒரு மாதத்திற்கு நான்கரை கோடி ரூபாய் வரும். இதை கேள்விப்பட்டு வாயைப் பிளந்த சில திமுக சீனியர்கள் தங்களுக்கும் மாவட்டங்கள் வேண்டும் என மூலனூர் கார்த்தியை தொடர்புகொள்ள தொடங்கினர்.

கரூர் கேங்க் Vs கட்சி கேங்க்! டாஸ்மாக் கேங் வார்

அப்போது விழுப்புரத்தைச் சேர்ந்த கட்சி சீனியர் ஒருவர், விழுப்புரம் மாவட்டம் தனக்கு வேண்டுமென கேட்டபோது, ‘தர முடியாது’ என விழுப்புரம் ஃபைனான்சியர் நாயுடு முரண்டு பிடித்ததால் பிரச்னை தலைமை வரை சென்றது. இறுதியில் தலைமை, சீனியருக்கு சாதகமாக செயல்பட்டதால், கோபமடைந்த விழுப்புரம் ஃபைனான்சியர், திருச்சி மீசைக்கார மாஜியிடம் தஞ்சமடைந்தார். தமிழகம் முழுவதும் கரூர் கம்பெனி எப்படியெல்லாம் பணத்தை வாரிக் குவிக்கிறது. மூலனூர் கார்த்தி எங்கெல்லாம் சொத்து  வாங்கியுள்ளார், அமலாக்கத்துறை அவரது வீட்டிலிருந்து என்னென்ன ஆவணங்களை எடுத்துச் சென்றது என அனைத்து கணக்குகளையும் ஒப்படைத்தார். இப்படி மாவட்டங்கள் கிடைக்காத சீனியர்கள் ஒன்றிணைய கரூர் கம்பெனிக்கு எதிராக தி.மு.க.விலேயே ஒரு தனி கேங்க் உருவானது.

திருப்பூர் மாவட்டத்தை விலைக்கு வாங்கிய ஊத்தூர் பிரமுகர், திருப்பூருக்கு சென்றபோது, அங்கிருந்த செல்வமான மாவட்டச் செயலாளர் ‘நான் எவ்வளவு பெரிய சீனியர், என்னுடைய மாவட்டத்திற்குள் கரூர் கம்பெனி நுழையக் கூடாது’ என கடுமையாக எச்சரித்தார். அதேபோல் மதுரையில் அங்கிருந்த திமுக சீனியர், டாஸ்மாக் விற்பனையாளர்கள் மூலம் கரூர் சும்பெனி எப்படியெல்லாம் வசூல் செய்கிறது என பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

ரித்தீஷ் என்ட்ரி!

இந்த நேரத்தில்தான் உதயநிதிக்கு நெருக்கமான ரித்தீஷ் களமிறங்கினார். சென்னை, எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரித்தீஷுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. ‘டாஸ்மாக் நிர்வாகத்தை ரித்தீஷ் பார்த்துக்கொள்கிறார்’ என்ற தகவல் பரவ சுரூர் கம்பெனிக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க. சீனியர்கள் அனைவரும் கப்சிப் ஆகிவிட்டனர்.

இந்தக் காலகட்டத்தில் அமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்றார். மூலனூர் கார்த்தி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து டாஸ்மாக் பார் வசூல் குறித்த பல ஆவணங்களை அள்ளிச் சென்றது. இடைக்கால டாஸ்மாக் அமைச்சராக ஈரோடு முத்துசாமி பதவியேற்றார். அவரை சந்தித்த மூலனூர் கார்த்திக் அண்ட் கம்பெனி, ரித்தீஷ் பெயரைப் பயன்படுத்தி மீண்டும் களத்தில் இறங்கியது. அமைச்சர் முத்துசாமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி பார்வையாளராக தி.மு.க தலைமை மூலனூர் கார்த்தியை அறிவித்தது.

மூலனூர் கார்த்திக்கு ப்ரமோஷன்!

பார்வையாளர் பதவி வந்த பிறகு கட்சியின் சீனியர்கள் பலரையும் ஒருமையில் அழைக்கத் தொடங்கினார் கார்த்திக்.  ‘அடுத்த முறையும் திமுக ஆட்சிதான். டாஸ்மாக் பணத்தில்தான் பாதி தேர்தலே நடக்கிறது. என்னை பகைத்துக்கொண்டால் அரசியலில் ஜீரோவாக்கி விடுவேன்’ என சொந்தக் கட்சியினரையே எச்சரித்தார். இந்த நிலையில் 2026 தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது. அதன்பிறகு டாஸ்மாக் வழக்கில் ஜாமினே கிடைக்காமல் இன்று வரை புழல் சிறையில் இருக்கிறார் மூலனூர் கார்த்தி” என்றார் விரிவாக…

கேட்கும்போதே தலை சுத்துதே!

(இன்னும் சுற்றும்…)

– அரவிந்த்



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here