Home தமிழ்நாடு “விஜய் ஆட்சி நன்றாக இல்லை!” சாலமன் பாப்பையாவின் கடைசி பேட்டி மீண்டும் வைரல் ! –...

“விஜய் ஆட்சி நன்றாக இல்லை!” சாலமன் பாப்பையாவின் கடைசி பேட்டி மீண்டும் வைரல் ! – Kumudam

0



தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற ஜாம்பவானுமான பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் இன்று காலமானார் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழி, இலக்கியம், சமூக சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்த அவரது மறைவு, தமிழ்கூறு நல்லுலகிற்கு மிகப்பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

1936ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்த சாலமன் பாப்பையா, பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நடிகர் என பல்வேறு துறைகளில் தனது தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். தனது நகைச்சுவை கலந்த பேச்சு மற்றும் ஆழ்ந்த தமிழ்ப் புலமையால் பல தலைமுறை மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

சாலமன் பாப்பையா மறைவு : 

சாலமன் பாப்பையா கடந்த சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் ஆட்சி குறித்து சாலமன் பாப்பையா பேசிய கருத்து : 

சாலமன் பாப்பையாவின் தமிழ் உலகத்திற்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் சமீபத்தில் பேசிய சில அரசியல் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த பேட்டியில், விஜய்யின் ஆட்சியின் ஆரம்ப கால செயல்பாடுகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்த சாலமன் பாப்பையா, “விஜய் ஆட்சி நன்றாக இல்லை” என குறிப்பிட்டதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

“இனி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” :

விஜய் தலைமையிலான ஆட்சியின் முதல் இரண்டு மாத செயல்பாடுகள் குறித்து பேசிய சாலமன் பாப்பையா, அந்த காலகட்டத்தில் ஆட்சி சிறப்பாக இல்லை என்ற தனது பார்வையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், எதிர்காலத்தில் ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அரசியல் குறித்து எப்போதும் தனது தனிப்பட்ட பார்வையை வெளிப்படையாக கூறக்கூடியவராக இருந்த சாலமன் பாப்பையாவின் இந்த பேட்டி தற்போது அவர் மறைந்ததைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ :

சாலமன் பாப்பையாவின் மறைவையடுத்து, அவரது பழைய பேட்டிகள், பட்டிமன்ற உரைகள் மற்றும் சமூக கருத்துகள் அடங்கிய வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், விஜய் ஆட்சி தொடர்பான அவரது கருத்துகள் அடங்கிய வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் அவரது பேச்சுத் திறமை, அரசியல் பார்வை மற்றும் சமூக சிந்தனைகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

தமிழுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு :

தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த சாலமன் பாப்பையாவின் மறைவு, தமிழர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது நகைச்சுவை கலந்த பேச்சும், எளிமையான விளக்கங்களும், அறிவார்ந்த கருத்துகளும் என்றும் மக்களின் நினைவில் நிலைத்து நிற்கும்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version