back to top
14.6 C
London
Thursday, September 17, 2026
No menu items!
Homeஅரசியல்பிரதமர் ரேஸில் விஜய்.. ரீல்ஸில் உருவான பிம்பமா? நிஜத்தில் பிரதமராக முடியுமா? - Kumudam

பிரதமர் ரேஸில் விஜய்.. ரீல்ஸில் உருவான பிம்பமா? நிஜத்தில் பிரதமராக முடியுமா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



“பிரதமர் ரேஸில் விஜயா… அவரால் பிரதமராக முடியுமா?” 

இந்தக் கேள்விக்கு… நரேந்திர மோடி…ராகுல் காந்தி…அவர்களுக்கு அடுத்ததாக…தமிழக முதலமைச்சர் விஜய்!

ஆம்…India Today – C Voter இணைந்து நடத்தியதாக வெளியாகியுள்ள சமீபத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பில்…2029-ல் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு…விஜய்க்கு 9.2 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளதாகவும்…மோடி, ராகுல் காந்திக்கு அடுத்ததாக…3-வது இடத்தில் விஜய் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு நடிகராக அரசியலுக்கு வந்த விஜய்…அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே…பிரதமர் பதவிக்கான போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்!

ஆனால்…இங்கேதான் மிகப்பெரிய கேள்வி. இந்த 9.2 சதவீதம்…விஜய்யின் உண்மையான தேசிய அரசியல் செல்வாக்கா? அல்லது… சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட்டு வரும் ஒரு மிகப்பெரிய political image-ன் விளைவா?

ஏனென்றால்… தமிழ்நாட்டை தாண்டி வடஇந்திய Instagram Reels-களை பார்த்தால்… விஜய் ஏற்கெனவே ஒரு தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டது போல ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. “விஜய்தான் அடுத்த பிரதமர்”…

“பெண்களுக்கு எதிரான குற்றம் செய்தால் 24 மணி நேரத்தில் தூக்கு!”

“பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் ஒன்றிய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம்!”

“கோயில் உண்டியல் பணம் அரசு பள்ளிகளுக்கு செல்கிறது!”

”பாகிஸ்தான் சென்று அங்குள்ள முக்கிய தலைவர்களை சந்தித்தார் விஜய்”

என பல அதிரடி தகவல்கள் Reels-ல் பரவுகின்றன. ஆனால், அதில் பலவற்றுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. சில தகவல்கள் முற்றிலும் போலியானவை என்றும் fact-check-கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம்… உத்தரபிரதேசம்… பீகார்… ஹரியானா… மகாராஷ்டிரா… என பல வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த Influencers ஒரே மாதிரியான தகவல்களை வெளியிடுகின்றனர்.

மொழி மாறுகிறது…ஆனால்…Script மாறவில்லை!

ஒரே சம்பவம்…ஒரே அரசியல் கருத்து…ஒரே மாதிரியான வசனங்கள்…இதனால், “இது இயல்பாக உருவாகும் Social Media Trend-ஆ? அல்லது திட்டமிட்ட Narrative Building-ஆ?”என்ற கேள்வி எழுகிறது.

இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவது… Influencer-களுக்கு பணம் கொடுத்து வீடியோக்கள் வெளியிடப்படுகிறதா என்ற குற்றச்சாட்டு. ஒரு பெண் Influencer ஒரு விஜய் வீடியோவுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை பேசப்பட்டதாக சொல்லி இருக்கிறார். 

இதுபோன்ற பல வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தால், அதற்குப் பின்னால் இருக்கும் பணத்தின் அளவு எவ்வளவு? அப்படியானால், “Views மட்டுமா வாங்கப்படுகின்றன? அல்லது ஒரு அரசியல் Image-ஐயே உருவாக்குகிறார்களா?” என்ற கேள்வி எழுகிறது.

இங்கேதான், சில அரசியல் ஆய்வாளர்கள் இன்னொரு முக்கியமான அரசியல் கணக்கை முன்வைக்கின்றனர். “இந்த Narrative-ன் மூலம் யாருக்கு லாபம்?” என்பதுதான் அந்த கேள்வி.

தேசிய அரசியலில் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிரான முக்கியமான அரசியல் முகமாக உருவெடுத்து வரும் நிலையில் அவருடைய அரசியல் Image-ஐ எதிர்கொள்ள விஜய் போன்ற புதிய அரசியல் முகத்தை தேசிய அளவில் முன்னிலைப்படுத்தும் முயற்சி இருக்கிறதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அதாவது, ராகுல் காந்தியின் அரசியல் கவனத்தை திசைதிருப்ப, விஜய்யை ஒரு புதிய தேசிய அரசியல் முகமாக வளர்ப்பது, இதன் மூலம் எதிர்க்கட்சியின் வாக்கு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்ற strategy இருக்கிறதா? என்பதுதான் அந்த சந்தேகம்.

இதோடு இன்னொரு அரசியல் கணக்கையும் சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். முதலில், விஜய்யை தேசிய அளவில் ஒரு பெரிய தலைவராக உருவாக்குவது.அடுத்ததாக…தேர்தல் நேரத்தில் அவரது மத அடையாளத்தை அரசியல் விவாதமாக மாற்றுவது.

குறிப்பாக…“விஜய் ஒரு கிறிஸ்தவர்” என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, அதன் மூலம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய முடியுமா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

ஆனால், இது அரசியல் ஆய்வாளர்கள் முன்வைக்கும் ஒரு theory மட்டுமே.

இதற்கு BJP நேரடியாக இப்படியொரு திட்டத்தை செயல்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் ஆதாரம் இதுவரை இல்லை. எனவே, இதை உறுதியான உண்மை என்று கூற முடியாது. ஆனால், இந்த அளவுக்கு விஜய்யை தேசிய அளவில் முன்னிறுத்தும் Social Media Narrative ஏன் உருவாகிறது? என்ற கேள்வி மட்டும் இருக்கிறது.

இப்போது,  மீண்டும் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கே வருவோம். “விஜய்யால் பிரதமராக முடியுமா?” கருத்துக்கணிப்பில் 3-வது இடம்… இதில் இருந்தும் இரண்டு முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

ஒன்று… விஜய் உண்மையில் பிரதமராகும் அளவுக்கு அரசியல் ரீதியாக தகுதி பெற்றுவிட்டாரா? 

இரண்டு… விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால், தமிழ்நாடு மற்றும் தேசிய அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும்?

இந்த இரண்டு கேள்விகளையும் கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்.

முதலில்… விஜய் பிரதமராக தகுதியானவரா?

சட்டரீதியாக பார்த்தால்… இந்திய குடிமகன் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணயிக்கும் தகுதிகளை பூர்த்தி செய்திருந்தால், பிரதமர் பதவியை அடைய முடியும். அந்த வகையில்… விஜய்யும் பிரதமர் பதவிக்கு ஆசைப்படலாம்.

ஆனால்…பிரதமராக ஆசைப்படுவது வேறு… அதற்கான அரசியல் அனுபவத்தையும் நிர்வாகத் திறனையும் நிரூபிப்பது வேறு.

இதற்கு நரேந்திர மோடியையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 2013-ல் பாஜக, மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியபோது… அவர் ஏற்கெனவே குஜராத் முதலமைச்சராக சுமார் 13 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.

அந்த காலகட்டத்தில்…தேர்தல்களை வென்றார். கட்சியின் அமைப்பை வலுப்படுத்தினார். நிர்வாகத் திறனை வெளிப்படுத்தினார். ஒரு வலுவான அரசியல் தலைவராக தன்னை நிலைநிறுத்தினார். அதன் பிறகுதான், பாஜக அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியது.

அதேபோல்…ஜெயலலிதாவும் பிரதமர் பதவி குறித்து தேசிய அளவில் பேசப்படும் நிலைக்கு வந்தபோது…அவர் ஏற்கெனவே பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து… பல தேர்தல்களில் வெற்றி பெற்று… தமிழ்நாட்டில் வலுவான அரசியல் தலைவராக தன்னை நிரூபித்திருந்தார்.

ஆனால் விஜய்? அவர் அரசியலுக்கு வந்து சில ஆண்டுகளே ஆகின்றன. முதலமைச்சராக பொறுப்பேற்றும் சில மாதங்களே ஆகின்றன. அரசியல் அனுபவமும் இன்னும் குறைவுதான். மிக முக்கியமாக, அவரது நிர்வாகத் திறன் இன்னும் நீண்ட கால அடிப்படையில் நிரூபிக்கப்படவில்லை. அதனால் டெல்லியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு இருக்கிறது என்று தேசிய அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

இரண்டாவது கேள்வி… விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால் என்ன நடக்கும்? 

இங்கேதான் அரசியல் கணக்கு மிகவும் சுவாரஸ்யமாகிறது. விஜய்யின் கட்சி தற்போது காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கிறது. ஆனால்… காங்கிரஸுக்கு தேசிய அளவில் ஏற்கெனவே ஒரு முக்கியமான பிரதமர் முகம் இருக்கிறது. ராகுல் காந்தி…

அப்படியிருக்க…ஒருவேளை விஜய்யின் கட்சி… “இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் விஜய்தான்” என்று அறிவித்தால் என்ன நடக்கும்?அது காங்கிரஸுடனான கூட்டணியில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். ஒருவேளை விஜய் காங்கிரஸை விட்டு வெளியே வந்தால்… காங்கிரஸ், திமுகவுடன் கைகோர்க்கும் வாய்ப்பும் உருவாகலாம். அப்படி நடந்தால்… தமிழ்நாட்டின் அரசியல் கணக்கே தலைகீழாக மாறக்கூடும்.

விஜய் ஆட்சியை பலவீனப்படுத்துவதற்கோ… அவரது அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கோ… திமுக – காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்யலாம். இவ்வளவு பெரிய அரசியல் ரிஸ்க்கை அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய் எடுக்கத் தயாராக இருப்பாரா? இதுதான் மிகப்பெரிய கேள்வி.

Reels-ல் மில்லியன் Views… வடஇந்திய Influencers… “PM Vijay” என்ற Hashtag… இவை அனைத்தும் ஒரு Image-ஐ உருவாக்கலாம். ஆனால், பிரதமர் பதவி என்பது Social Media Popularity Contest அல்ல. அதற்கு, தேர்தல் வெற்றி வேண்டும். நாடாளுமன்ற பலம் வேண்டும். பல மாநிலங்களில் ஆதரவு வேண்டும். கூட்டணி அரசியலை கையாள வேண்டும். முக்கியமாக, வாக்குகளை வெற்றியாக மாற்ற வேண்டும்.

ஒரு Reels-க்கு…ஒரு மில்லியன் Views கிடைப்பது வேறு. ஒரு தொகுதியில்… ஒரு லட்சம் வாக்குகளைப் பெறுவது வேறு. 

இந்த பிரதமர் பிம்பம்… வாக்குப்பெட்டியில் உருவாகிறதா? அல்லது Instagram Reels-ல் உருவாக்கப்படுகிறதா? அதுதான், விஜய்யின் தேசிய அரசியல் பயணத்தின் உண்மையான சோதனை!

ரீல்ஸில் பிரதமர்… நிஜத்தில் பிரதமராவாரா விஜய் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here