back to top
17.8 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeஅரசியல்சர்ச்சையில் சிக்கிய திமுக பவர் செண்டரின் உதவியாளர்? என்ன நடக்கிறது அறிவாலயத்தில்..? - Kumudam

சர்ச்சையில் சிக்கிய திமுக பவர் செண்டரின் உதவியாளர்? என்ன நடக்கிறது அறிவாலயத்தில்..? – Kumudam

Date:

Related stories

அஸ்தமனமாகும் அனிதாவின் அரசியல்? ஆட்டத்தைத் தொடங்கிய மூவர்!

தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன்,...

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img



அண்ணா அறிவாயத்தின் தலைமையின் தலைமையின் நெருங்கிய உறவான அந்த பவர் செண்டர், அரசியல் களத்தில் தனக்கென்று தனி அடையாளத்தை கொண்டு சமூகத்தில் நிகழ்கின்ற அனைத்து குற்றச்சம்பங்களையும் தைரியமாக எதிர்த்து குரல் கொடுக்கும் மாபெரும் பவர் சென்டராக இருக்க கூடியவர். தமிழ்நாடு டூ டெல்லி வரை இந்த பவர் சென்டரின் குரல் பல ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் முக்கிய முகங்களில் பிரதான இருப்பவரும் இவர் தான். தற்போது டெல்லி தேசிய அரசியலில் திமுகவின் முகமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் முகமாய் இந்த பவர் சென்டரை தான் பார்க்கின்றனர். 

இப்படி அரசியல் களத்தில் தனி ஒரு பவர் சென்டராக வலம் வந்து கொண்டிருக்கும்  இவர், தற்போது திமுக இறங்கு முகமாக இருக்கும் நிலையில் அதனை மீட்டெடுக்கும் முக்கிய தலையாகவும், கழகத்தின் பிரதான அதிகார மையமாகவும் இருக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அவருக்கே தெரியாமல் ஒரு மிகப்பெரிய சதி ஒன்று இந்த பவர் செண்டருக்கே தெரியாமல் நிகழ்ந்து  கொண்டிருக்கிறதாம்.

பவர் சென்டரிடம் பிஏவாக இருக்கக்கூடிய அந்த மூன்றெழுத்து நபர் ஏகப்பட்ட பிசினஸ்கள் ஈடுப்பட்டு வருவதாகவும், அதில் ஒன்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பது போன்ற வேலைப்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முதல் ஸ்டெப்பாக கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் அவரை அணுகியபோது அவரிடம் கன்சல்டிங் சார்ஜாக 10 லட்டுக்களை வாங்கியிருக்கிறாராம். மேலும், விசா இல்லை எனவும், அதை வாங்குவதற்கு பணமும் இல்லையென்றும் அந்நபர் சொல்லவே, தனது சொத்து ஒன்றை அந்நபர் மீது டாகுமெண்ட் செய்து, அதை தன்னிடமே அடமானம் வைத்து அந்நபர் விசாவுக்காக கடன் வாங்கியதாகவும் வெளிநாட்டில் வேலை செய்து மாதம் மாதம் கடனை திருப்பி தருவார் என்றும் டாக்குமென்ட் கிரியேட் செய்திருக்கிறார் மூன்றெழுத்து புள்ளி.

ஆனால், கிருஷ்ணகிரி நபர், தன் பெயருக்கு மாற்றப்பட்ட இடத்தை வேறொருவருக்கு விற்றுவிட்டு, வேறு ஏஜென்ட் மூலம் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகியுள்ளாராம். இதையறிந்த எக்ஸ் உதவியாளர் புள்ளி, கிருஷ்ணகிரி நபரின் வீட்டுக்கு ரவுடிகளுடன் சென்று குடும்பத்தினரை கடத்த முயன்றிருக்கிறார். இதைப் பார்த்த ஊர்மக்கள் போலீஸுக்கு தகவல் சொல்ல, உதவியாளரின் கேங்க் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறது என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

இந்த சம்பவம் பவர் சென்டருக்கு தெரியுமா? ஒருவேளை தெரிந்தால் என்ன முடிவு எடுப்பார்? என்று கேள்வி எழுந்துள்ளது. பாரம்பரிய கட்சியில்  அனைத்து குற்றச்சாட்டுகளை கேள்வி கேட்கும்  மிகப்பெரிய பவர் சென்டராக அரசியல் களத்தில் வலம் வந்து  கொண்டிருக்கும் நிலையில், இது வெளியில் தெரிந்தால் அந்த பவர் சென்டருக்கே மைனஸ் பாயின்டாக அமைந்து விடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எனவே, இது குறித்து இந்த பவர் சென்டர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here