back to top
18.4 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
HomeசினிமாJailer 2 Update: ரஜினிக்கு வில்லியான மலையாள நடிகை... கெஸ்ட் ரோலில் ஹிருத்திக்? - Kumudam

Jailer 2 Update: ரஜினிக்கு வில்லியான மலையாள நடிகை… கெஸ்ட் ரோலில் ஹிருத்திக்? – Kumudam

Date:

Related stories

அஸ்தமனமாகும் அனிதாவின் அரசியல்? ஆட்டத்தைத் தொடங்கிய மூவர்!

தூத்துக்குடி திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில்,கீதாஜீவன்,...

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img



சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

அந்த வகையில், தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள் லிஸ்ட் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவர் வில்லி கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து கவனம் பெற்ற அன்னா ரேஷ்மா ராஜன், ‘ஜெயிலர் 2’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இன்னும் அதிகமாக அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ரஜினிக்கு எதிரான வில்லி கதாபாத்திரம் என்ற தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, பாலிவுட் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷனும் ‘ஜெயிலர் 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், அவர் படத்தில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகும் தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கனவே ‘ஜெயிலர்’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திரங்களின் சிறப்பு தோற்றங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தன. அதேபோல், ‘ஜெயிலர் 2’ படத்திலும் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை இணைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, அனிருத் இசை, பிரமாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் என ‘ஜெயிலர் 2’ மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், பெண் வில்லியாக அன்னா ரேஷ்மா ராஜன், கெஸ்ட் ரோலில் ஹிருத்திக் ரோஷன் என்ற தகவல் வெளியாகியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

டீசரில் மறைக்கப்பட்ட ரஜினிக்கு எதிராக களமிறங்கப் போகும் அந்த பெண் வில்லி யார்? ஹிருத்திக் ரோஷனின் கதாபாத்திரம் என்ன? ‘ஜெயிலர் 2’வில் இன்னும் எத்தனை சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன? என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here