back to top
18.4 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeஅரசியல்மேயர் ப்ரியாவுக்கு செக்?... புதிய அரசு போடும் பலே பிளான்! - Kumudam

மேயர் ப்ரியாவுக்கு செக்?… புதிய அரசு போடும் பலே பிளான்! – Kumudam

Date:

Related stories

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img



சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவுக்கும் புதிய அரசுக்கும் இடையே அரசியல் மோதல் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை மேயர் பிரியாவுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் இடையேயும் நீயா? நானா?’ என்ற போட்டி தான் கோட்டை வட்டாரங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடர்பான விஷயங்களில்  மேயர் பிரியாவுக்கும், புதிய அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோட்டை வட்டாரத்தில் இந்த விவகாரம் தற்போது ஹாட் டாபிக்காக போய்க் கொண்டிருக்கிறது.

புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மாநகராட்சியின் பணிகள் மற்றும் டெண்டர் விவகாரங்களில் ஒரு சார்பாக செயல்படுகிறார்கள் என்றும்,உரிய நிதி ஒதுக்கப்படாததால் சில வேலைகள் அப்படியே முடங்கி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த பிரச்சனையை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலேயே மேயர் பிரியா முன்வைத்து, நிதி நெருக்கடி மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, மாநகராட்சி தொடர்பான கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சென்று பேசாமல், கடிதம் மூலமாக மட்டும் தெரிவிப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு, “அவசியம் ஏற்பட்டால் முதலமைச்சரை நேரில் சந்திப்பேன்என மேயர் பிரியா பதிலளித்ததாக கூறப்படுகிறது. இந்த பதில் பனையூர் வட்டாரங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே திமுக கண்ட்ரோலில் இருக்கின்ற பெருநகர மாநகராட்சிக்கும், புதிதாக தோன்றி தற்போது அரசியல் கோட்டையை பிடித்து ஆட்சி செய்திருக்கின்ற அரசுக்கு இடையே  நிர்வாக ரீதியாக மோதிக் கொள்வது கோட்டை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சருக்கும் சென்னை மேயர் ப்ரியாவுக்கு சுத்தமாக ஒத்துபோகதாத சமயத்தில், இந்த மோதல் போக்கால் சென்னை மாநகராட்சியின் பல டெண்டர்களை ரத்து செய்து ப்ரியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறதாம் இந்த தவெக அரசு .

மேலும் சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக நான்காயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்ட விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது இந்த புதிய அரசு. அது தொடர்பான ஃபைலை ஆய்வு செய்தபோது முறைகேடு தொடர்பாக பல விவகாரங்கள் தெரியவந்திருக்கின்றன. விரைவில் இந்த விவகாரத்தில் பலர் சிக்கப்போகிறார்கள். அதில் குறிப்பாக மாநகராட்சி மேயரும் என்கிறது கோட்டை வட்டாரம்.

இதனிடையே மேயருக்கு செக் வைக்குமா புதிய அரசு? புதிய அரசு எடுக்க போகும் அதிரடியான முடிவு என்னவாக இருக்கும் பொறுத்திருந்து பார்போம்? 

 

 

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here