Home சினிமா தீபாவளி ட்ரீட்.. சிம்பு கொடுத்த முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்! – Kumudam

தீபாவளி ட்ரீட்.. சிம்பு கொடுத்த முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்! – Kumudam

0



இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்கி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவலை நடிகர் சிம்பு நிகழ்வு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் ஆரம்பம் முதலே திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னைப் பின்னணியில் கேங்ஸ்டர் கதைக் களத்தைக் கொண்ட இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்டப் பலர் இதில் நடித்து வருகின்றனர்.

இடையில் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுப் பின் மீண்டும் தொடங்கி, தற்போது சென்னையில் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் படம் வரும் 2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு குறித்துப் பேசினார். அப்போது அவர், “அரசன் திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்குக் கண்டிப்பாக வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாகாது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் ரிலீஸ் தள்ளியே போனாலும் படம் சிறப்பாக வரும் என்பதை உறுதிபடுத்தினார். “நீங்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் ‘அரசன்’ திரைப்படம் ஒரு தரமான சம்பவமாக அமையும். மேலும், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘The World of Arasan’ திரைப்படத்தின் பிரத்யேகக் க்ளிம்ப்ஸ் வீடியோ வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியிடப்படும்” என்ற தகவலையும் சிம்பு பகிர்ந்து கொண்டார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version