Home அரசியல் அதிமுக To தவெக…..சிங்கை ராமச்சந்திரனுக்கு கிடைத்த முக்கியப் பதவி! – Kumudam

அதிமுக To தவெக…..சிங்கை ராமச்சந்திரனுக்கு கிடைத்த முக்கியப் பதவி! – Kumudam

0



2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலரும் தவெகவில் ஐக்கியமாகி வரும் நிலையில், அண்மையில் விலகிய அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமசந்திரனுக்கு தற்போது முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஐடி விங் தலைவர், மண்டல செயலாளர், மாணவர் அணி செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் சிங்கை ராமச்சந்திரன். கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அவர், தேர்தலில் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 23-ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்தார். பின்னர், ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கியப் பொறுப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) அமைப்பின் தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், “தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) அமைப்பின் தலைவராக திரு. சிங்கை ஜி. ராமச்சந்திரனை தமிழ்நாடு அரசு நியமிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், TANSIM தலைவராக சிங்கை ராமச்சந்திரனின் நியமனத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த சில வாரங்களிலேயே சிங்கை ராமச்சந்திரனுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய அமைப்பான TANSIM-ன் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version