Home சினிமா புதிய சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகர்….. தலைவலியில் தந்தை! – Kumudam

புதிய சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகர்….. தலைவலியில் தந்தை! – Kumudam

0


சினிமா உலகில் தந்தை பேர் சொல்லும் பிள்ளையாக அறிமுகமாகி, பல ஹிட் லிஸ்ட் படங்களை கொடுத்து, ஜென் சி பெண்கள் ஃபேன்ஸ் இவர்மீது பயங்கர க்ரேஸில் இருந்து வருகிறார்கள்.  இப்படி ஏற்றத்தில் இருந்த அந்த வாரிசு நடிகரின் வாழ்க்கையில், என்ட்றா மவுனே இப்படி பண்ற என்று தந்தை புலம்பும் அளவிற்கு பல குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

தன்னுடைய மகனால் வந்த வினைகளை தீர்ப்பதே தந்தைக்கு பெரும் பாடாக இருந்து வருவதால், இதை நினைத்து தந்தை மண்டையை பிய்த்து கொண்டு இருக்கின்றாராம்.  அப்படி என்ன சர்ச்சையில் தான் இந்த வாரிசு நடிகர் சிக்கியிருப்பாரு என்று எல்லாருக்கும் கேள்வி எழும், அது குறித்து விரிவாக பார்போமா?

வாரிசு நடிகர் பல படங்களில் கலக்கி கொண்டிருக்கும் சமயத்தில், அவரை தேடி ஒரு ஹிட் மூவியில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதன்படி படத்திற்கு ஒப்பந்தமாகி படமும் ஹிட் லிஸ்ட்டில இடம் பிடிச்சிருச்சி.  இந்த படத்தில் தான் அந்த நடிகருக்கு ஒரு பூகம்பமே வெடித்தது. என்னவென்றால், ஹிட் படத்தில் நடித்த நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. 

இந்த சர்ச்சை ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கையில், இந்த வாரிசு ஹிந்தி ரீமேக் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி ரூபாய் 1 கோடி அட்வான்ஸாக பெற்று விட்டு பிறகு அந்தப் படத்தில் நடிக்க முடியாது என சொல்லி விலகி விட்டாராம்.

மேலும் அவர் வேறொரு தயாரிப்பு நிறுவனத்தோடு அடுத்த மூவிக்கு கமிட் ஆகிட்டாராம்.  இந்த நியூஸ் தயாரிப்பு நிறுவனத்தில் காதில் விழ  உடனே தயாரிப்பு நிறுவனம் டென்ஷனாகி, இது தொடர்பாக ஓபன் பிரஸ்மீட் வைக்கவும் தயாரிப்பாளர்கள் ரெடியாக இருந்தார்களாம். இது பெரிய சர்ச்சையாக மாற கடைசி நேரத்தில் நடிகரின் தந்தை தலையிட்டு தயாரிப்பாளர்களை கூல் செய்திருக்கறாராம். இந்த தகவல் தான் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version