back to top
20.4 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeசினிமாகலாச்சாரக் காவலர்களுக்கு பதிலடி! கங்கனாவை ஆஃப் செய்த க்ரிதி - Kumudam

கலாச்சாரக் காவலர்களுக்கு பதிலடி! கங்கனாவை ஆஃப் செய்த க்ரிதி – Kumudam

Date:

Related stories

வேட்டுவம் தான் ஃபர்ஸ்ட் ! – பா. ரஞ்சித்! ஜெர்மன் தள்ளிப்போனது ஏன் ?

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின்...

“அது யாரையும் குறிவைச்சு சொன்னது இல்ல!” – விஜய் குறித்த கருத்து.. VJS  விளக்கம்!

கடந்த வாரம் தனது பேச்சால் எழுந்த சர்ச்சைக்கு விஜய் சேதுபதி,...

இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்… வெல்லப்போவது யார்? – Kumudam

இடைத்தேர்தல் களம்: விஜய்க்கு செக் வைக்கும் தோழர்கள்... வெல்லப்போவது யார்?...
spot_imgspot_img


பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

க்ரிதி சனோனின் ஆடை குறித்து கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அதற்கு க்ரிதி சனோன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். “கலாச்சாரம் உடையில் இல்லை.. உணர்வில் உள்ளது” என அவர் பதிலடி கொடுத்திருப்பது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் ரக்ஷா பந்தன் விளம்பரத்தில் க்ரிதி சனோன் இடம்பெற்றிருந்தார். இந்தியாவின் முக்கியமான பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ரக்ஷா பந்தனுக்கான விளம்பரத்தில் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து சமூக வலைதளங்களில் ‘கலாச்சார காவலர்கள்’ சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக, பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற வகையில் விமர்சித்திருந்தார்.

“சகோதரனுக்கு ராக்கி அணிவிக்கும் போது இப்படிப்பட்ட உடையை அணிவார்களா? பெண்களுக்கு தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளை அணியும் சுதந்திரம் இருக்கிறது. ஆனால், சில எல்லைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம்” என கங்கனா தெரிவித்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு தற்போது க்ரிதி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.

அதில் அவர், “ஒரு பண்டிகையின் சாரம்சம் நாம் அணியும் உடையில் இல்லை. அந்த பாரம்பரியத்திற்கு நாம் அளிக்கும் அர்த்தத்திலும், அதனுடன் இணைந்திருக்கும் உணர்வுகளிலும்தான் அனைத்தும் இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரக்ஷா பந்தன் குறித்து பேசியுள்ள க்ரிதி சனோன், “ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பை குறிக்கும் ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக்கொள்கிறோம். ஒரு சகோதரன் இருப்பதால் கிடைக்கும் பாதுகாப்பைப் போலவே, நாங்களும் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெண்களின் ஆடையை வைத்து அவர்களின் கலாச்சாரத்தை மதிப்பிடுவது குறித்து கேள்வி எழுப்பிய அவர், “ஒரு பெண் அணியும் ஆடையை வைத்து அவரது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான மரியாதையை கணிப்பது சரியல்ல. பெண்கள் என்ன அணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

காலத்துக்கு ஏற்ப பாரம்பரிய உடைகளின் பாணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள க்ரிதி சனோன், “பாரம்பரிய உடைகளின் வடிவம் காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கலாம். ஆனால், இன்றும் ஒரு பெண்ணின் ஆடையை வைத்தே அவரது கலாச்சாரத்தின் மீதான மரியாதை அளவிடப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

இறுதியாக, “பண்பாடும் பாரம்பரியமும் ஒரு பெண்ணின் மனதில் இருக்கிறது; அவளுடைய கழுத்துப் பகுதியில் அல்ல” என்று கூறி தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

க்ரிதி சனோனின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவுக்குரல்களுடன் வைரலாகி வருவதுடன்  கங்கனா ரணாவத்தை ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here