back to top
15.4 C
London
Sunday, September 20, 2026
No menu items!
Homeஅரசியல்திக் திக்கில் தவெக அமைச்சர்.... வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்! - Kumudam

திக் திக்கில் தவெக அமைச்சர்…. வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்! – Kumudam

Date:

Related stories

விசில் vs இரட்டை இலை… தாராபுரம் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின்...

ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் அண்ணாமலையார் ! அகற்றச் சொல்லும் நீதிமன்றம் !

திருவண்ணாமலை அடிவார ஆக்கிரமிப்புகள், பக்தர்கள் நெரிசல், 1535 வீடுகள் விவகாரம்......

"புதிய தலைமைச் செயலகம் அவசியம்" – மாணிக்கம் தாகூர் விளக்கம் !

விஜய் தலைமையிலான கூட்டணி, பிரதமர் வேட்பாளர் சர்ச்சை, திமுக விமர்சனம்...
spot_imgspot_img


காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நல்ல பரீட்சையமாக உள்ள மருத்துவரான இவர், எளிய பின்புலத்தில் வளர்ந்து நவீன டிஜிட்டல் பல் மருத்துவமனையை நிறுவியுள்ளார். இந்த மருத்துவமனை மூலம் பெரும் வளர்ச்சிக் கண்ட இவருக்கு, அரசியல் ஆசையும் எட்டிப்பார்த்துள்ளது. நீண்ட கால விஜய் ஃபேனான இவர், விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்ட நிலையில், பின்னர் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார்.

தூய்மையான கலாச்சாரத்தை உருவாக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள இந்த டாக்டர், விஜய்யின் அரசியல் கொள்கைகள் மற்றும் ‘புதிய அரசியல்’ என்ற சிந்தனையால் கவரப்பட்டு இக்கட்சியில் இணைந்துள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இவரைப் பற்றி ஒரே புகழ்ச்சியை மழையாய் பொழிந்து கொண்டு இருக்கின்றனர் காரைக்குடியன்ஸ். தற்போது மாற்றத்திற்கான தூய்மை அரசு என்றுக் கூறப்படும் விஜய் அமைச்சரவையில் இவர் முக்கிய இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் தான் இந்த மூன்றெழுத்து அமைச்சருக்கு பெரிய அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்த மூன்றெழுத்து அமைச்சரின் தொகுதியில், 10 வயது சிறுவனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தம்பிரான் மருத்துவமனையை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் கே.எம்.சி மருத்துவமனை சேர்ந்த மருத்துவர் காமாட்சி சந்திரன் அளித்த தவறான சிகிச்சையனால் சிறுவனின் பாலுறுப்பு அழுகி, பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதனை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, சிறுவனின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், தம்பிரான் மருத்துவமனை மருத்துவர் சோமசுந்தரம் மற்றும் கே.எம்.சி மருத்துவமனை மருத்துவர் காமாட்சி சந்திரன்  மீது காரைக்குடி வடக்குப் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு, செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமா? மருத்துவர்களைக் கைது செய்யக் கோரி சிறுவனின் உறவினர்களும் பொதுமக்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. .

இந்த பிரச்சனை பூகம்பமாக வெடிக்க, தவெகவின் மூன்றெழுத்து அமைச்சரிடம் இந்த பஞ்சாயத்து சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட டாக்டர்மிருந்து 50 லட்டுகள் சிறுவன் தரப்பிற்கு கொடுக்க வைத்திருக்கிறார் என்று உள்விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். நீதிக் கேட்டவர்களை லட்டுகள் கொடுத்து மறைக்கப் பார்ப்பதா? என்று கொதித்துப் போன இந்திய மருத்துவர் சங்கம், அமைச்சர் எப்படி இந்த பஞ்சாயத்து செய்து பணம் வாங்கிக்கொடுக்கலாம்? என்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் புகார் கொடுத்திருக்கிறது. 

இந்த நிலையில், இந்த விவகாரம் எப்போது வேண்டுமானாலும் இந்த மூன்றெழுத்து அமைச்சருக்கு எதிராக வெடிக்கலாம் என்று காரைக்குடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இது வெளியே வந்தால், தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், இதனால் விஜய்க்கே பெரும் சிக்கலை உண்டாக்கும் என்றும் கூறப்படுகிறது. 

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் எப்படி, “நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண்விழிக்கிறேன்” என்று கூறியதுபோல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தற்போதைய முதலமைச்சர் விஜய்யும் இருப்பதாகவே பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஒருவேளை இந்த பிரச்னை மீண்டும் வெடிக்க தொடங்கினால், மூன்றெழுத்து அமைச்சரின் பதவி என்னவாகும்? கட்சியில் நீடிப்பாரா? தவெக இதற்கு என்ன தீர்வு காணப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here