Home அரசியல் நேரு சொன்ன அந்த வார்த்தை … தொகுதி மறுவரைக்கு திமுக ஆதரவு ? – Kumudam

நேரு சொன்ன அந்த வார்த்தை … தொகுதி மறுவரைக்கு திமுக ஆதரவு ? – Kumudam

0



தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரை மீதான திமுகவின் நிலைப்பாடு சந்தேகப்படும் வகையில் இருப்பதாக குற்றம்ச்சாட்டிய நிலையில் பதிலளித்த  திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் பதில்களும் அதற்கேற்றாற்போல் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய தினம் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுன் மற்றும் நிர்மல்குமார் தொகுதி மறுவரையில் திமுகவின் நிலைப்பாடு சந்தேகப்படும் விதத்தில் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த, முன்னாள் அமைச்சர் நேரு “தொகுதி மறுவரையினால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்று போர்க்கொடி தூக்கியவர் எங்கள் கழகத் தலைவர் ஸ்டாலின்,தேர்தலுக்கு முன்பே அதில் வெற்றியும் கண்டார்” என்று கூறினார்.

மேலும் “இந்த பிரச்னை சபைக்கு வந்ததற்கு காரணமே திமுக 7.18 சதவீதம் வந்தால் தொகுதி மறுவரைக்கு ஒத்துக்கொள்வதாக பத்திரிகைகளில் பரவியுள்ள்ளது. ஆனால் தீர்மானத்தின் மீதான எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் மாறவில்லை. ஆனால் ஒருவேளை தொகுதி மறுவரை கொண்டு வந்து  மாற்றம் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் சதவீதம் 7.18 குறையாமல் இருக்கவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இந்த நிலைப்பாட்டின் மீது மீண்டும் கேள்வி எழுப்பிய சட்டத்துறை அமைச்சர் கே நிர்மல் குமார் ” இதனால்தான், கேட்கிறேன் இதுவரை திமுக ஒருவார்த்தை கூட எதிர்த்து வாக்களிப்போம் என்று சொல்லவில்லை, திமுக யாருக்காவது மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார்களா என்று சந்தேகம் எழுகிறது”  என்று கேள்விகளை எழுப்பினார்.

இப்படியிருக்கையில், இந்த ஆண்டு இறுதியில் தொகுதி மறுவரையின் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடியவில்ல நிலையில் தொகுதி மறுவரை மசோதாவை எதிர்த்து திமுக வாக்களித்தால் மட்டுமே அந்த மசோதா நிறைவேறாது. ஒரு வேலை அந்த மசோதாவிற்கு திமுக எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் மசோதா நிறைவேறிவிடும். இதனால்தான் திமுக மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version