Home சினிமா ஜெயிலர் 2 அப்டேட் ….. ஆகஸ்ட் 21 ல் தலைவரின் முதல் விருந்து ! –...

ஜெயிலர் 2 அப்டேட் ….. ஆகஸ்ட் 21 ல் தலைவரின் முதல் விருந்து ! – Kumudam

0


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், மைக் ஏந்திய கை மற்றும் பிரமாதம் (‘superb’) சைகையுடன் உயர்த்தப்பட்ட கை இடம்பெற்றுள்ளன. அதில் ‘6 PM Today’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது வெளியிட்டுள்ள போஸ்டரில் The Feast is ready! என்ற tag line உடன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் என  படக்குழு  அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகும் ‘ஜெயிலர் 2’ மீது ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் வெளியீடு அக்டோபர் 15-ம் தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ள அப்டேட்டில் படத்தின் முதல் பாடலுக்கான அறிவிப்பாக இருக்கலாம் என சினிமா ஆர்வலர்கள் சமூக வலைத்தளத்தில் எதிர்பார்ப்பை கிளம்பிய நிலையில் தற்போது அதுகுறித்தான அப்டேட் தான் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர்தான் அனிருத், இவர்கள் கூட்டணியில் இதுவரை வந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்தான். இன்று வெளியாக இருக்கும் அப்டேட் மட்டும் முதல் சிங்கள் பாடல் அனிருத்தின் ஹிட் வரிசையில் நிச்சயம் தலைவருக்கான இந்தப் பாடலும் இடம்பெரும் என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version