கிருஷ்ணகிரி கிளையின் LIC முகவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில்
திரு.K.சஞ்சய் காந்தி தலைவர்
திரு.S.முருகானந்தம் செயலாளர் திரு.தேவன் பொருளாள ராக தேர்வு செய்ய பட்டனர். இந்த தேர்தலில் கோட்டத்தின் தலைவர் திருM.P.இளையப்பன் பொதுச்செயலாளர் திரு.T. அமுதன், பொருளாளர் திரு.S.ரமேஷ் பாபு,
அகில இந்திய செயற்குழு உறுப்பினர் திரு.L.சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர். பின்னர் புதிய நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி தர வேண்டும்.
பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகள் மீது பெறும் கடன் தொகைக்காண வட்டியை குறைத்திட வேண்டும்.
அனைத்து முகவர்களுக்கும் மற்றும் முகவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு பாலிசி வழங்கிட வேண்டும். முகவர்களுக்கான கிராஜுவெட்டி தொகையை 20 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்.
முகவர்களுக்கான குழு காப்பீடு திட்டத்தின் வயதை 69லிருந்து உயர்த்தி தரவேண்டும்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
