back to top
16.5 C
London
Wednesday, August 12, 2026
No menu items!
Homeஅரசியல்தவெகவிற்கு தாவிய அதிமுகவின் முக்கிய தலை... இனி தவெக தான் புதிய அதிமுகவா?  - Kumudam

தவெகவிற்கு தாவிய அதிமுகவின் முக்கிய தலை… இனி தவெக தான் புதிய அதிமுகவா?  – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



சிங்கை ராமச்சந்திரன், அதிமுகவின் இளம் நிர்வாகிகளில் முக்கியமானவராகக் கருதப்பட்டவர். தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலராக பணியாற்றியதுடன், மாணவரணியிலும் பொறுப்பு வகித்துள்ளார். அவரது தந்தை சிங்கை கோவிந்தராசுவும் அதிமுகவில் நீண்ட காலம் செயல்பட்டவர். ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பி. கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இதனிடையே, 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் இளம் பேச்சாளர்களை உருவாக்கும் பணியிலும் சிங்கை ராமச்சந்திரன் ஈடுபட்டார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் புதிய பேச்சாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி மூலம் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் சிங்கை ராமச்சந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, கடந்த ஜூலை 23ஆம் தேதி அதிமுகவில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

சில வாரங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி, கட்சியில் தான் வகித்து வந்த பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தனது செயல்பாடுகள் மூலம் கவனம் பெற்ற அவர், நேற்று (ஆகஸ்ட் 11) அக்கட்சியின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தவெகவில் இணைந்தார்.

தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிங்கை ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாகவும், அனைவரின் ஆதரவையும் ஆசிகளையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் சிங்கை ராமச்சந்திரன் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்திருந்த நிலையில், அந்த வரிசையில் சிங்கை ராமச்சந்திரனும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்தடுத்து அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருவதால், எது ரியல் அதிமுக என்ற குழப்பம் ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here