back to top
20.8 C
London
Tuesday, August 11, 2026
No menu items!
Homeதமிழ்நாடுநீட் தேர்வு ரத்து ? சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் ! - Kumudam

நீட் தேர்வு ரத்து ? சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம் ! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு இந்தத் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே இந்தத் தேர்வை முற்றிலும் ஒழித்துவிட வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்ற கனவைச் சீர்குலைக்கும் விதமாகவே இந்தத் தேர்வு அமைந்துள்ளது என்று அனைவரும் எதிர்த்து வரும் நிலையில், இதற்காக மாணவர்கள் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இந்தத் தேர்வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-க்கும் அதிகமாகவும், இந்திய அளவில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபோதும், மத்திய அரசு இதற்கு தலைசாய்க்காமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது.

இதனிடையே, சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகியதாகவும், பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித்தீர்மானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்தார். நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதை எடுத்துக்கூறிய அவர், தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனிடையே, தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு காங்கிரஸ் தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், “மாணவர்கள் சமூகத்திற்கும் இனியும் இழுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். நீட் தேர்வை எதிர்க்கும் போராட்டக் களத்தில் ராகுல்காந்தி நின்றுகொண்டிருக்கிறார்” என்றார். டெல்லி போராட்டத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தந்தது தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசியதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், “நீட் சமூக நீதிக்கு எதிரானது. வினாத்தாள் கசிவுகள் மாணவர்களின் கனவுகளைச் சிதைக்கின்றன. நீட் தேர்வு முறையால் கல்வி மாஃபியாக்கள் பயனடைகிறார்கள். ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். ஒரே ஒரு நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களின் திறமையைத் தீர்மானிப்பது மிகப்பெரிய தவறு. நீட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ளனர். ‘டிஜிட்டல் இந்தியா’ என மேடைக்கு மேடை முழங்கும் பாஜக அரசால் ஒரு தேர்வைக்கூட சிறப்பாக நடத்த முடியவில்லை” என்றார்.

அமைச்சர் விஸ்வநாதன் பேச்சுக்கு குறுக்கிட்டுப் பேசிய எ.வ.வேலு, “நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திப் பேசியவர் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த அமைச்சர் குலாம் நபி ஆசாத்”  என்று குறிப்பிட்டுக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவைத் தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இனி வரும் நாட்களில்  நீட் தேர்வு மூலம் மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்று இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here