back to top
25.6 C
London
Saturday, August 8, 2026
No menu items!
Homeஅரசியல்"லவ் டுடே படத்த ஆறு தடவ பார்த்தேன்" - திமுக எம்.எல்.ஏ சொன்ன விஜய் படத்துல...

“லவ் டுடே படத்த ஆறு தடவ பார்த்தேன்” – திமுக எம்.எல்.ஏ சொன்ன விஜய் படத்துல என்னதான் இருக்கு – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் 2026 – 27 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 05 தொடங்கியது. இரண்டு நாட்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பொது விவாதம்  நேற்றைய தினம் நடந்தது. பட்ஜெட் விவாதத்தின்போது பேசிய ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்,”மாணவர் பருவத்தில் எல்லோரும் போல, நானும் காலேஜில் படிக்கும் போது முதல்வரின் படத்தை விரும்பி பார்ப்பேன். நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் லவ் டுடே என்ற படம் வந்தது. அதை 6 முறை பார்த்தேன். அவரை ஒரு நல்ல நடிகராக, ஒரு நல்ல டான்ஸ்ராக, ஒரு நல்ல பைட்டராக ரசிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால், அவர் முதல்வராக நடிப்பதை தான் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” என்று முதலமைச்சர் விஜயை பாராட்டுவதுபோல விமர்சித்தார். 

அப்படி என்னதான் இருக்கு என்று தற்போது உள்ள GEN-Z  விஜய் ரசிகர்கள் முதலமைச்சர் விஜய் நடிப்பில் 1997 – ஆம் ஆண்டு வெளியான லவ் டுடே படத்தை தேடி தேடி பார்த்துவருகின்றனர். 

முதலமைச்சர் விஜய் தமிழ் சினிமாவில் அவருடைய ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகராக மாறுவதற்கு முன்பே, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது “லவ் டுடே”. பாலசேகரன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய், சுவலட்சுமி, மந்த்ரா, ரகுவரன், ராஜன் பி.தேவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.பி.சௌத்ரி தயாரித்த இப்படத்திற்கு சிவா இசையமைத்துள்ளார்.

90ஸ் காதலை அப்படியே கண்முன் நிறுத்தும் விஜய்யின் ‘லவ் டுடே’… எப்படி இருக்கு?

90ஸ் காலத்து காதல், குடும்ப பாசம், இளமைத் துடிப்பு என அனைத்தையும் கலந்து உருவான விஜய்யின் ‘லவ் டுடே’ திரைப்படம், இன்றைய GEN-Z  ரசிகர்களை ரசிக்க வைக்கும் படமாக இருக்கிறதா?

காதலைச் சுற்றி நகரும் கதையான இந்த படத்தில், நாயகன் கணேஷ், தனது தந்தையுடன் செல்லமாக வளர்ந்து வரும் இளைஞன். சந்தியா மீது காதல் கொள்ளும் கணேஷ், தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி தொடர்ந்து முயற்சி செய்கிறார். ஆனால் சந்தியாவோ ஆரம்பத்தில் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.

கடுமையான போலீஸ் அதிகாரியான சந்தியாவின் தந்தைக்கும் கணேஷின் காதல் தெரியவர, பிரச்சனை பெரிதாகிறது. இதனால் காதலர்கள் பிரியும் சூழல் உருவாகிறது. இதன்பிறகு கணேஷின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களும், காதலுக்காக அவர் எதிர்கொள்ளும் சவால்களும்தான் படத்தின் மையமாக அமைகின்றன.

விஜய்யின் இளமைத் துள்ளல் :

‘லவ் டுடே’ படத்தில் விஜய் நடித்த கணேஷ் கதாபாத்திரம், அவரது ஆரம்பகால காதல் படங்களில் மிகவும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களில் ஒன்றாகும்.

காதல் காட்சிகளில் இருக்கும் துடிப்பு, நண்பர்களுடன் செய்யும் குறும்புகள், குடும்பத்துடன் இருக்கும் பாசம் என விஜய் தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்தை ரசிக்க வைக்கிறார். குறிப்பாக காதலுக்காக போராடும் இளைஞனாக அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ரகுவரனின் நடிப்பு… படத்தின் முக்கிய பலம் :

விஜய்யின் தந்தையாக நடித்த ரகுவரன், படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறார். மகன் மீது அன்பு வைத்திருக்கும் தந்தையாக அவரது நடிப்பு பல இடங்களில் மனதைத் தொடுகிறது.

அதேபோல், சந்தியாவின் தந்தையாக நடித்த ராஜன் பி.தேவ், கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். மந்த்ரா உள்ளிட்ட துணை நடிகர்களும் கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

90ஸ் காலத்து காதல்… இன்றும் ரசிக்க முடியுமா?

இன்றைய காலத்தில் காதல், சமூக வலைதளங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை சுற்றி நகரும் நிலையில், ‘லவ் டுடே’வில் செல்போன் இல்லாத காலத்து காதலை பார்க்கும்போது ஒரு தனி Nostalgia கிடைக்கிறது.

காதலியை சந்திப்பதற்காக காத்திருப்பது, கடிதங்கள் மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் காதலை வெளிப்படுத்துவது போன்ற 90ஸ் காலத்து விஷயங்கள் படத்திற்கு தனித்துவமான உணர்வை கொடுக்கின்றன.

படத்தின் திரைக்கதையில் சில இடங்களில் 90ஸ் காலத்துக்கே உரிய நாடகத்தன்மை இருந்தாலும், காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாக வைத்திருப்பதால் இன்றும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ரசிக்க முடிகிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் :

“விஜய்யின் இளமைத் தோற்றம் + ரகுவரனின் நடிப்பு + 90ஸ் காதல் உணர்வு + குடும்ப சென்டிமென்ட்” ஆகியவை படத்தின் முக்கிய பலங்களாக உள்ளன.

முக்கியமாக இந்த படத்தில் வரும் “என்ன அழகு எதனை அழகு” என்ற பாடல் இன்றும் பலரால் குறிப்பாக GEN-Z தலைமுறையினரால் படத்தின் பெயர்கூட தெரியாமல் விஜயின் பாட்டு என்பதால் ரசித்து கேட்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு இப்பாடல் அனைவராலும் விரும்பி கேட்கும்படி “FAVOURITE PLAYLIST” ஆக இருக்கிறது . 
1997-ல் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, 175 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம். பின்னர் இப்படம் தெலுங்கில் “SUSWAGATHAM” என்றும், கன்னடத்தில் “MANJU” என்றும், இந்தியில் “KYA YEHI PYAAR HAI” என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

இறுதியாக, “லவ் டுடே” ஒரு முழுமையான காதல் படமாக மட்டுமல்லாமல், விஜய்யின் ஆரம்பகால திரைப்பயணத்தை நினைவுபடுத்தும் முக்கியமான படமாகவும் இருக்கிறது. இன்றைய தலைமுறைக்கு சில காட்சிகள் பழையதாகத் தோன்றினாலும், 90ஸ் காலத்து காதலை ரசித்தவர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு “Nostalgic Feel” கொடுக்கும்.

குறிப்பு : 90ஸ் காதலின் அழகை மீண்டும் ரசிக்க விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்!

இதனால்தான் தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் இந்த படத்தை ஆறு முறை பார்த்திருப்பாரோ. அவர் படம் நன்றாக இருந்ததை மட்டும் கூறாமல் முதல்வராக நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறியதற்கு த.வெ.க. வினர் மற்றும் விஜய் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here