back to top
21.4 C
London
Thursday, August 6, 2026
No menu items!
Homeசினிமாராஜ்மோகனை சாதி பார்த்து விமர்சித்தேனா? – சர்ச்சைக்கு விஷால் விளக்கம்..! - Kumudam

ராஜ்மோகனை சாதி பார்த்து விமர்சித்தேனா? – சர்ச்சைக்கு விஷால் விளக்கம்..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


இதுகுறித்து  குமுதம் டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ராஜ்மோகனுக்கு தகுதி இல்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அவர் மீது எந்த தனிப்பட்ட விமர்சனமும் இல்லை. என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதில் தேவையில்லாமல் சாதி அரசியலும் இழுக்கப்பட்டது. எனக்கு அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுகூட  தெரியாது” என்றார்.

தொடர்ந்து, “சினிமா துறையை நன்கு அறிந்த விஜய், அந்தத் துறையுடன் தொடர்புடைய பொறுப்பை ஏற்றிருந்தால், அந்தத் துறையின் பிரச்சினைகளை இன்னும் எளிதாக புரிந்துகொண்டு தீர்வு காண முடியும் என்பதைத்தான் கூறினேன். அது யாருடைய தகுதியையும் கேள்விக்குட்படுத்தும் நோக்கில் கூறப்பட்ட கருத்தல்ல” என்றும் விஷால் விளக்கம் அளித்தார்.

முன்னதாக அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளிக் கல்வித் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத் தணிக்கைச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, அரசு அச்சகம், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட போது, அதுகுறித்து பேசிய நடிகர் விஷால், “ராஜ்மோகனுக்கு என்ன முன் அனுபவம் இருக்கிறது? அவருக்கு இந்தப் பதவி எப்படி சரியாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு நேர்காணலை காண: https://www.youtube.com/watch?v=BDo5pW1oamc



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here