back to top
17.1 C
London
Thursday, August 6, 2026
No menu items!
Homeஅரசியல்தைரியம் இருந்தா பதில் சொல்லட்டும் .... விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி! - Kumudam

தைரியம் இருந்தா பதில் சொல்லட்டும் …. விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


சட்டமன்றத்தில் இன்று 2026 -27 – ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் “திமுகவின் ஆட்சி திட்டங்களின் பெயரை மாற்றினார்களே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை” என்று வேளாண் அறிக்கையை விமர்சித்துள்ளார்.  தமிழ்நாட்டில் நேற்றைய தினம் சட்டமன்ற கூட்டத்தொடரில் TN  Budget  2026 -27 – ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். 

சுமார் 2.30 மணி நேரம் பேசிய பட்ஜெட் உரையை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த அரசு திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்த அரசு அமைந்து கிட்டத்தட்ட 100 நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கினால் அது மிகப்பெரிய ‘பூஜ்ஜியம்’தான்.

அதேபோன்றுதான் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டும் மிகப்பெரிய பூஜ்ஜியமாகவே அமைந்துள்ளது.” என்று கடுமையாக விமர்சித்த நிலையில், இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் வினோத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். நேற்றைய தினம் போல அமைச்சர் வினோத்தின் வேளாண் நிதிநிலை அறிக்கை உரை 2.30 மணி நேரம் பேசப்பட்டது. 

இந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “மேகதாது பிரச்சனை, பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை என தவெக ஆட்சியில் விவசாயிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இந்த அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாகவும் கருப்பு சட்டை அணிந்து வந்ததாக” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

மேலும் “வேளாண் பட்ஜெட் என்று கூறுவதைவிட, மரபை மீறி முதல்வரை புகழும் செயல்களை செய்துள்ளனர். இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்றால், பட்ஜெட்டிலும் திட்டங்கள் இல்லை. திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர்களை மாற்றி புதுத் திட்டங்கள் போல அறிவித்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது. 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்களுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி எனக் கூறி மக்களை ஏமாற்றி முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தார்.

மேகதாது அணை பிரச்னை ஒவ்வொரு நாளும் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில்,கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரி நீரி கிடையாது தெளிவாக நிலையில் இந்த விவகாரத்திற்கு தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையிலும் அது குறித்தான  எந்தவொரு முடிவும் எடுக்காமல்  இந்த அரசு. மேலும் காவிரி விவகாரம் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளோம். அப்போது பல கேள்விகளை முன் வைப்போம் விஜய்க்கு தைரியம் இருந்தா வாயைத் திறந்து பதில் சொல்லட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here