back to top
22.5 C
London
Wednesday, August 5, 2026
No menu items!
Homeதமிழ்நாடுமது பிரியர்களுக்கு குட் நியூஸ்…..இனி சரக்கு வாங்க க்யூ தேவையில்லை! - Kumudam

மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…..இனி சரக்கு வாங்க க்யூ தேவையில்லை! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கவும், நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் ஏற்படும் சிரமங்களை குறைக்கவும், மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதியை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, tasmace2e.in என்ற இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான டாஸ்மாக் கடையைத் தேர்வு செய்து, அங்கு இருப்பில் உள்ள மதுபானங்களை ஆன்லைனில் தேர்வு செய்து பணம் செலுத்த முடியும். பின்னர், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று முன்பதிவு செய்த மதுபானத்தை நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம், குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்க வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதோடு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான மதுபானம் இருப்பில் உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்து பணம் செலுத்தும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்த பிறகு, காத்திருப்பு இல்லாமல் சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று மதுபானத்தை பெற்றுக்கொள்ளும் இந்த நடைமுறை, மது வாங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், மது அருந்துவோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நிற்பதால் ஏற்படும் சிரமம் குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here