back to top
22.5 C
London
Wednesday, August 5, 2026
No menu items!
Homeஅரசியல்ஆன்லைனில் மது முன்பதிவா? டாஸ்மாக் திட்டத்துக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு! - Kumudam

ஆன்லைனில் மது முன்பதிவா? டாஸ்மாக் திட்டத்துக்கு அன்புமணி கடும் எதிர்ப்பு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடைகளில் நெரிசலைத் தவிர்க்கவும், நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை குறைக்கவும், மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் புதிய வசதியை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, tasmace2e.in என்ற இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான டாஸ்மாக் கடையைத் தேர்வு செய்து, அங்கு இருப்பில் உள்ள மதுபானங்களை ஆன்லைனில் தேர்ந்தெடுத்து பணம் செலுத்த முடியும். பின்னர், சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று முன்பதிவு செய்த மதுபானத்தை நேரடியாக பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை நாளை முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும், அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் முயற்சி மிகவும் பிற்போக்கானது ஆகும்.

மதுவகைகளை முன்பதிவு செய்வதற்காக டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் https://tasmace2e.in/ என்ற இணையதளம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளிலும் என்னென்ன மதுவகைகள் உள்ளன? அவற்றின் விலை எவ்வளவு என்பதைக் கண்டறிந்து முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு முன்பதிவு செய்து பணம் செலுத்தியவர்களுக்கு கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீது வழங்கப்படும். எந்தக் கடையில் மது வாங்க முன்பதிவு செய்தார்களோ, அந்த கடைக்கு செல்வதற்கான வழிகாட்டும் வரைபடமும் அவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் அந்தக் கடைக்கு சென்று கியூ.ஆர் கோடுடன் கூடிய கூடிய ரசீதைக் காட்டி மதுபாட்டிலை பெற்றுக்கொள்ள முடியும்.

மதுக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், சில்லறை விற்பனைக் கடைகளில் அதிகபட்ச விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும் இந்த புதிய முறை அறிமுகம் செய்யப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஓசையின்றி நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது ஆகும். இது மது வணிகத்தையும், மதுப் புழக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய துறைகள் ஏராளமான உள்ளன. கல்வி, மருத்துவம், வேளாண்மை, உணவுப் பொருள் வழங்கல், மின்சாரம் போன்ற துறைகள் சீர்திருத்தத்திற்காக ஏங்குகின்றன. ஆனால், அவற்றில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக மது வணிகத்தில் மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீரழிவுகளை செய்யத் துடிப்பது சரியல்ல.

மது மனிதனுக்கு அடிப்படைத் தேவை அல்ல. மது வாங்குவதற்கு எளிதானதாக இருக்கக் கூடாது. அப்போது தான் மது வணிகம் குறையும். ஆனால், மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுக்கடைகளுக்கு சென்று வரிசையில் நிற்காமல் வாங்க வசதி செய்து கொடுப்பது மது வணிகம் அதிகரிப்பதற்கு தான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் உள்ள 35,039 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அந்தக் கடைகள் ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நாளும் ஏராளமான மக்கள், குறிப்பாக பெண்கள் உணவுப் பொருள்களை வாங்குவதற்காக நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். அவர்களின் வாட்டத்தைப் போக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, மது குடிப்பவர்களின் வசதிக்காக இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது சமூகச் சீரழிவுக்கு தான் வகை செய்யும்.

டாஸ்மாக் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதால், அதற்கும் குறைவான வயதுப் பிரிவினர் மது வாங்குவது தடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. இதுவும் ஏற்க முடியாத வாதம். 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்கக் கூடாது



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here