Home அரசியல் ”அய்யய்யோ, எம்மா எம்மா…” – உதயநிதியா? ஆபாச நிதியா? TVK It Wing போட்ட பதிவு..!...

”அய்யய்யோ, எம்மா எம்மா…” – உதயநிதியா? ஆபாச நிதியா? TVK It Wing போட்ட பதிவு..! – Kumudam

0


தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 03) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்ட பாலைவனம் போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதலமைச்சராக இருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்குமா? இல்லை நம் தலைவர் தான் இந்த நிலைமைக்கு விட்டிருப்பாரா? என்று பேசிக் கொண்டிருந்தார். 

அப்போது, ”இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரல ஆனா இத பத்தி இங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் வாயை திறந்து பேசறாரா? பேச மாட்டேங்கிறார். அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை என்ன?” என்று உதயநிதி கூறும் போது கூட்டத்தில் இருந்தவர்களிடமிருந்து ‘த்ரிஷா த்ரிஷா” என சத்தம் வரவே. ‘திமுக மேல என்ன பொய் வழக்கு போடலாம் பொய் கேஸ் போடலாம்’ என்று உதயநிதி பேசினார். மீண்டும் ‘த்ரிஷா த்ரிஷா எனும் சத்தம் அங்கு கூடியிருந்தவர்களிடமிருந்து அதிகரிக்கவே அந்த சத்தமிட்டவர்களை நோக்கி அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக ”எங்க தண்ணி வருதோ இல்லையோ, அங்க தண்ணி வரணும்” என்று உதயநிதி ஆபாசமான அர்த்தத்தோடு கூறியதாகக் கூறியதாகவும், கூட்டத்திலிருந்தவர்கள் ஆரவாரத்தோடு சத்தம் போட்டதை கேட்டு அதை ஆமோதிக்கும் வகையில் நகைத்துக்கொண்டே ”காவிரியை சொன்னேன்” என்று பேசி இருக்கிறார் என்றும் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் இன்று கைது செய்யப்பட்டார். 

உதயநிதியின் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்ட்த்தில் ஈடுப்பட்ட்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்ட்தோடு, அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இதுதொடர்பாக தவெக ஐடி விங் போட்ட பதிவு கவனத்தை பெற்று வருகிறது. 

அதில், “அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார். இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக. திமுகவின் இன்றைய தியாக முழக்கம்,

அய்யய்யோ, எம்மா எம்மா!
அய்யய்யோ எம்மா எம்மா!

#ஆபாசநிதி” என்று பதிவிட்டுள்ளது. 

https://x.com/TVKHQITWingOffl/status/2084577647473172491?s=20

தவெக ஐடிவிங்கின் இந்த பதிவு பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, நடுநிலைவாதிகள், முன்னதாக முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா குறித்துமே உதயநிதி பேசி இருந்தார், அப்போதெல்லாம் வராத கோபம், நடிகையை பற்றி பேசியது வருகிறதா? என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version