Home சினிமா தயாரான புதிய வதந்தி… எஸ்.ஜே.சூர்யாவை ரீப்ளேஸ் செய்த சசிகுமார்..! – Kumudam

தயாரான புதிய வதந்தி… எஸ்.ஜே.சூர்யாவை ரீப்ளேஸ் செய்த சசிகுமார்..! – Kumudam

0



முதல் சீசனில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், புதிய சீசனில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி, இயக்கியுள்ளார். வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடரில் குற்றவுணர்வு, மறைக்கப்பட்ட ரகசியங்கள், வதந்திகள் மற்றும் கடந்த காலத்திலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டம் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. தமிழுடன் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தத் தொடருக்கு ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்கள் வழங்கப்படுகின்றன. 

இந்தியா மட்டுமின்றி உலகின் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த வெப் சீரிஸை ரசிகர்கள் காண முடியும். ‘வதந்தி’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புதிய கதைக்களத்துடன் வெளியாகும் இரண்டாம் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version