Home அரசியல் கைது செய்யப்பட்ட தெருக்குரல் அறிவு… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் விஜய்? – Kumudam

கைது செய்யப்பட்ட தெருக்குரல் அறிவு… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர் விஜய்? – Kumudam

0



நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா பார்ட்டி சார்பில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று(ஜூலை 20) நடைபெற்ற பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது, போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்தப்பட்டதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டது. இந்த நடவடிக்கையில் பல மாணவர்கள் காயமடைந்ததோடு, பலர் தீவிர சிகிச்சை பிரிவில் ஈடுப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கவனம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகம் முன்பு இன்று(ஜூலை 21) ராப் பாடகர் அறிவு உள்ளிட்ட 4 பேர் திரண்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துச் சென்றனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் நீண்டகாலமாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள், தேர்வு முறை மற்றும் சமூகநீதி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டெல்லி போராட்டத்தைத் தொடர்ந்து சென்னையிலும் நடைபெற்ற இந்த சம்பவம் அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி பாடியுள்ளதோடு, தவெக கொள்கைப் பாடலையும் எழுதியவர் அறிவு. இப்படிப்பட்டவரின் கோரிக்கையை விஜய் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுப்பாரா அல்லது பத்தோடு பதினொன்றாக இவரை கைது செய்துவிட்டுவாரா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version