back to top
25.9 C
London
Sunday, August 2, 2026
No menu items!
Homeஅரசியல்எதிர்க்கட்சி தலைவரும் சைகை செய்யலாமா? சபாநாயகர் சொன்ன பதில்! - Kumudam

எதிர்க்கட்சி தலைவரும் சைகை செய்யலாமா? சபாநாயகர் சொன்ன பதில்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் குறித்து பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர் இன்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி போட்டியிட்டு ஆட்சியை பிடித்தது. அதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் அனைவரும் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் குறித்து அறிவித்த ஜே.சி.டி. பிரபாகர் தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 5 ம் தேதியும் வேளாண் பட்ஜெட் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் பேரவையில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். கரூரில் பேசிய முதலமைச்சர் விஜய் பேரவையில் கேள்வி கேட்டுவிட்டு பதில் சொல்வதற்குள் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்து விடுகின்றன. இதனால் பேரவையின் கதவுகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் முதலமைச்சர் விஜய் சொன்னதை போல பேரவையின் கதவுகள் பூட்டப்படுமா என்று கேள்வி எழுப்பினார்?

அதற்கு பதிலளித்த ஜே.சி.டி பிரபாகர் கதவைப் பூட்ட வேண்டும் என்று சொன்னதில் முதலமைச்சர்  விஜய் சொன்னதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதனை வைத்து கேள்வி கேட்கக் கூடாது.

பேரவையில் கேள்வி மட்டும் எழுப்பி விட்டு எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தால் எப்படி பதில் சொல்வதையும் கேட்க வேண்டும் அல்லவா? எனவே கேள்வி கேட்டு பதில் சொல்வதையும் கேட்க வேண்டும் என்ற நோக்கில் தான் முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்.

பதிலளித்ததை தொடர்ந்து மற்றொரு செய்தியாளர்  முதலமைச்சர் விஜய் கையை கழுத்துக்குக் கீழே அசைத்து சைகைக் காட்டியது விதிமீறல் இல்லையா  என்று எழுப்பிய கேள்விக்கு  பதிலளித்த ஜே.சி.டி. பிரபாகரன் முதலமைச்சர் விஜய் சைகை காட்டியதில் எந்த விதிமீறலும் இல்லை. மேலும் அவர் என்ன சைகை காட்ட போகிறார் என்பது எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

உடனே அடுத்த கேள்வி எழுந்தது. அதுபோல எதிர்கட்சியினருக்கும் சைகை காட்ட வாய்ப்பு கொடுப்பீர்களா என்ற போது அதற்கு பதலளித்த பிரபாகர் எதிர் கட்சியினர் என்னிடம் என்ன சைகை காட்ட போகிறார்கள் என்பதை என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் பிறகு அதனை செய்யலாமா? வேண்டாமா ?நான் முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எல்லாம் பேரவை தலைவரின் பதில் மழுப்பும் விதமாக இருக்கின்றது என்று கூறுகிறார்கள். மேலும் ஆளும் கட்சியினருக்கு ஒரு விதிமுறை? எதிர்கட்சியினருக்கு ஒரு விதிமுறையா?என்று கேள்வியும் எழுந்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here