back to top
14.8 C
London
Sunday, August 2, 2026
No menu items!
Homeசினிமா'வாரணாசி' அப்டேட்.. பிரியங்கா சோப்ராவின் மிரட்டல் லுக்! - Kumudam

‘வாரணாசி’ அப்டேட்.. பிரியங்கா சோப்ராவின் மிரட்டல் லுக்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பாகுபலி,ஆர் ஆர் ஆர் போன்ற ஹிட் படங்களை  இயக்கிய  எஸ்.எஸ். ராஜமவுலியின் “வாரணாசி”  திரைப்படத்தின் பிரியங்கர் சோப்ராவின் பிறந்தநாளான இன்று அவருக்கு தெரிவிக்கும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் மகேஷ் பாபு,பிரியங்கா சோப்ரா நடிக்கும் “வாரணாசி” திரைப்படம் 2027 ம் ஆண்டு ஏப்ரல் 7 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதில் பிரியங்கா சோப்ரா “மந்தாகினி” என்ற வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

பிரியங்கா சோப்ராவின் 44 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்தும் விதமாக  தனது எக்ஸ் தளத்தில் இயக்குநர் ராஜமவுலி வாரணாசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டும், “அவள் புன்னகைக்கும் போது பேரழகு.. புன்னகைக்காத போது பேரனல் வாரணாசியில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா” என பாராட்டியுள்ளார்.

ராஜமவுலி வெளியிட்ட போஸ்டரில் பிரியங்கா சோப்ரா சுருள் தலைமுடியுடன் முற்றிலும் கருப்பு நிற உடையில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் வசீகரமான தோற்றத்தில் இருக்கின்றார். இது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இத்திரைப்படம் சுமார் ரூ 1400 கோடி பிரம்மாண்ட செலவில் உருவாகி வரும் நிலையில் இந்திய திரையுலகில் வரலாற்றிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்படும் திரைப்படமாகும்.

கி.பி 512 முதல் தற்காலம் வரை திரேதா யுகம் முதல் கலியுகம் வரை எனப் பல காலகட்டங்களை இணைக்கும் ஒரு அறிவியல் சார்ந்த புனைகதை மற்றும் ஆன்மீக சாகசப் படமாக இது  உருவாகிறது.

இத்திரைப்படத்தில் மையக் கருத்தாக அண்டவெளியிலிருந்து பூமிக்கு வரும் விண்கல் ஆபத்தும் மற்றும் வாரணாசி படித்துறைகளில் ரகசியங்களும்  இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்,ஒடிசா,கென்யாவின் ஆப்பிரிக்க காடுகள் மற்றும் அண்டார்டிகாவின் உறைப்பனிகள்  பகுதிகள் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது.

மேலும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ‘மகேஷ் பாபு கதாநாயகனாக ‘ருத்ரா’ மற்றும் ‘ஸ்ரீராமர்’ என இருவேறு பரிமாணங்களில் நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜயேந்திர பிரசாத் கதையமைப்பில், எம்.எம். கீரவாணியின் இசையமைப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படம், 2027 ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here