back to top
18.9 C
London
Saturday, August 1, 2026
No menu items!
Homeஅரசியல்குழுவாகும் திமுக அதிமுக கூட்டணி... உறுதிப்படுத்திய டிடிவி! - Kumudam

குழுவாகும் திமுக அதிமுக கூட்டணி… உறுதிப்படுத்திய டிடிவி! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் இணைந்து செயல்படலாம் என்றும், கேரளாவில் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கட்சிகள் அரசியல் போட்டியிலும் பா.ஜ.க. எதிர்ப்பில் ஒன்றிணைவதைப் போல தமிழ்நாட்டிலும் அதுபோன்ற அரசியல் சூழல் உருவாகலாம் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாடாளுமன்றத் தொகுதிகளின் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு வரை ஆர். எஸ். எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து வந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மே 4 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மாற்றி மாற்றி பேசி சர்ச்சைகளில் சிக்கிய திருமா தனிபெரும் கட்சியாக தவெக உருவெடுத்து ஆட்சி கட்டிலில் அமர  தயார் நிலையில் இருந்த போது அப்பொழுதிலிருந்தே திருமாவின் பேச்சில் சற்று தடுமாற்றம் ஏற்பட தொடங்கியது. 

ஆனால் தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் ஓரணியில் இருக்க வேண்டும் பேசியிருப்பது அரசியல் களத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தக் கருத்து வெளியானதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் புதிய கூட்டணி சாத்தியங்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. 

‘பா.ஜ.க.வை எதிர்க்க தி.மு.க., த.வெ.க. ஆகிய இரு கட்சிகளும் தேசியளவில் ஓரணியில் இருக்க வேண்டும்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதை அடுத்தே டெல்லி ரியாக்ஷனாக டி.டி.வி. தினகரனின் இந்த பேச்சு பார்க்கப்படுகிறது.

வி.சி.கவின் விருப்பம் நிறைவேறக் கூடாது என்ற சிந்தனையில் தி.மு.க. அ.தி.மு.க.வை ஒரே குடையின் கீழ் செயல்பட வைப்பது என்ற திட்டத்தை செயல்படுத்த தயாராகிவிட்டதாம் டெல்லி பா.ஜ.க. மேலிடம். அதன்படிதான் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், ‘அண்ணாவும், ராஜாஜியும் ஒன்றிணையவில்லையா? அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் ஒன்று சேர்க்கும். தி.மு.க., அதிமு.கவும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.

தி.மு.க. கூட்டணிக் கட்சிகளை அழைத்து விஜய் அமைச்சரவையில் இடம்பெற செய்தது நியாயம் என்றால், எந்தக் கூட்டணியும் நியாயம்தான்’ என்று பேசியிருக்கிறார். விரைவில் தமிழக அரசியலில் விசித்திரமான வானவேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.”

திருமாவளவனின் கருத்தும், அதனைத் தொடர்ந்து டி.டி.வி. தினகரன் வெளியிட்ட இந்தப் பேச்சும், தமிழக அரசியலில் கூட்டணி அரசியல் மீண்டும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. வரும் காலங்களில் அரசியல் கட்சிகளின் நகர்வுகள் எந்த திசையில் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here