Home அரசியல் பெரம்பூர் தொகுதி : மக்கள் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்! – Kumudam

பெரம்பூர் தொகுதி : மக்கள் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்! – Kumudam

0


பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை இன்று திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் முதலமைச்சர் விஜய். சட்டசபை தேர்தலில் இரு தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பெரம்பூரின் எம்எல்ஏவாக தற்போது உள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின் தொகுதிக்கு முதல் முறையாக முதலமைச்சர் விஜய் இன்று பெரம்பூரில் உள்ள சர்மாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை அவர் திறந்து வைத்து பார்வையிட்ட பிறகு அங்குள்ள வசதிகள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கினர். அதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ சேவை மையத்தையும் திறந்து வைத்ததுடன் தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுள்ளார்.

ரேஷன் கார்டு  பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும்  மக்கள் சேவை செயலியை அறிமுகமும் செய்துள்ளார். தொகுதி சார்ந்த பிரச்சனைகளை அந்த செயலியின் மூலம்  பெரம்பூர் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக அமையும் இதனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன் பிறகு வியாசர்பாடி மெட்ரோவில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தையும் பார்வையிட்டார். மேலும் எம்.கே.பி.நகரில் ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய ரேஷன் அட்டையை வழங்கி பொருட்களையும் வழங்கினார். முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான மக்கள் ஆரவாரத்தோடு பூக்கள் தூவி வரவேற்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version