back to top
25.7 C
London
Friday, July 10, 2026
No menu items!
Homeஅரசியல்திமுகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்... கரூரில் அனல் பறந்த பேச்சு! - Kumudam

திமுகவை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்… கரூரில் அனல் பறந்த பேச்சு! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியாதாவது,  என் நெஞ்சில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் மனதளவில் சில வலிகளையும் காயங்களையும் மறக்க முடியாது. அப்படி தான் என் வாழ்வில் கரூர் சம்பவம் அதிக வலி தருவதாக மனதில் உள்ளது.  நான் கரூர் வந்தபோது எதிர்பார்த்ததை விடவும் கூட்டம் அதிகமாக உள்ளது என்று காவல் துறையினர் சொல்லியிருக்கலாம் அல்லவா?

நெடுஞ்சாலையில் இருந்து போலீசாரே அழைத்து வந்த அந்த நாடகத்தை நான் நம்பி விட்டேன். திரையில் எனது படம் பாடலை பார்த்து முத்தம் கொடுத்த எனது சகோதரியின் பிள்ளைகளை  இழந்துள்ளோம். வலியுடன் வீட்டில் இருந்த என்னை ஓடி ஒளிந்து விட்டான் என் சொல்வீர்களா? வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? வலியுடன் உள்ள என்னை ஏளனமாக பேசி என் மீது பழிப்போடுவதா? சட்டசபையில் ஸ்டாலின் சார் நம்ம மேல் அனைத்தையும் திருப்பிவிட்டு அரசியல் செய்வது என்ன நியாயம்? வலி தந்த அனைவருக்கும் 2026 தேர்தலில் தக்க பதிலடி மக்கள் கொடுத்துள்ளார்கள்.

மக்களுக்கு நன்றி கடன் செலுவதற்காகவே தான் சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்துள்ளேன். காலத்திற்கும் அவர்கள் எழுந்திராக வகையில் தொடர்ந்து தக்க பதிலடி கொடுத்துள்ளீர்கள். பணமா? ஜனமா? என்றால் எனக்கு எப்பொழுதும் ஜனம் தான் முக்கியம்.

உங்களை விட காசு பணம் முக்கியமா என்ன? இது போல் அவர்களால் சொல்ல முடியுமா? கட்சி நிதி என்று சொன்ன உடனேயே சட்டசபையிலிருந்து ஓடினார்களே எப்படி தெரியுமா?அரசு அலுவலகங்களில் ஊழல் இன்றி வேலை தொடர்ந்து நடக்கிறது. மரியாதை அளித்து பேசுவதாக முதியவர் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து திமுக  ஆட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது தெரியுமா? கரூர் சம்பவத்தின் போது காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுத்ததா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல. எனக்காக எல்லாவற்றையும் கொடுத்த மக்களுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தவன் நான். என்னை ஏளனமாக பேசுகிறீர்கள், ஓடி ஒளிந்துவிட்டார் என என்னைப் பார்த்து பேசினர். வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் பேசுவீங்களா?

ஒவ்வொரு துறையிலும் தீயசக்தியும், தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து பார்ட்டி ஃபண்ட் வாங்கியுள்ளனர். பார்ட்டி பண்டு என்றுதான் சட்டமன்றத்தில் சொன்னேன். எந்த கட்சி எனச்சொல்லவில்லை. சென்னையில் பாலம் கட்ட வழக்கமான செலவைவிட இருமடங்கு செலவில் ஒப்பந்தம் விட்டுள்ளனர்.அதையெல்லாம் தோண்டி எடுத்து ரத்து செய்தோம். இன்னும் எத்தனை வருமென்று தெரியவில்லை.

விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல என கதறல் கதறல் என திரும்பும் பக்கமெல்லாம் கதறல். அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சம் இல்லை, ஒரு பைசா ஊழல் இல்லை. அரசு அலுவலகங்களில் வேலைகள் விரைவாக நடப்பதாக மக்கள் பெருமையுடன் பேசுகின்றனர்.

எல்&டி நிறுவனத்துடன் ரூ.18ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்க உள்ளது. தீயசக்திபோல் ரீல் தாய்மாமன் எல்லாம் இல்லை. நான் ரியல் தாய்மாமன். தீயசக்தியின் நிர்வாகம் பற்றிய வெள்ளை அறிக்கையை அண்மையில் வெளியிட்டோம். நிதித்துறை குறித்த வெள்ளை அறிக்கையை பற்றி சுருக்கமாக ஒரு உதாரணம் சொல்கிறேன்.

ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றியுள்ளனர். தண்ணீர் எங்கே போனது என தெரியவில்லை. நான் பேசவில்லை என்றால் வாயத் திறங்க CM என பேட்ஜ் குத்திக்கொண்டு வருகின்றனர். நான் பேசினால் விஜய்க்கு அரசியல் பேசத் தெரியவில்லை என சொல்வார்கள். நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போடப்பட்டுள்ளது.

மேகதாது அணை வழக்கில் தமிழ்நாட்டு மனுவை உச்சநீதிமன்றம் எப்போது ரத்து செய்தது? அப்போது ஆட்சியில் இருந்தது யார்? ஏன் சரியாக வாதாடவில்லை? சட்டமன்றத்தில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்தோம். எப்படி கொண்டு போக வேண்டுமோ அதை செய்வோம். எங்களுக்குள் ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என நிரூபிக்க முடியுமா? இடைத்தேர்தலில் நிரூபியுங்கள், பிறகு பேசுங்கள். பேசுவதை விட செயலில் காட்ட வேண்டும். ‘டாக் லெஸ், ஒர்க் மோர்’ என்பதே நமது அரசியல் என்று திமுக மீது பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து  முதலமைச்சர் விஜயின் உரையானது இருந்தது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here