back to top
25.4 C
London
Thursday, July 9, 2026
No menu items!
Homeசினிமாதளபதி கச்சேரிக்கு ரெடியா? வெளியான 'ஜன நாயகன்' RELEASE DATE..! - Kumudam

தளபதி கச்சேரிக்கு ரெடியா? வெளியான ‘ஜன நாயகன்’ RELEASE DATE..! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், கனடா விநியோக நிறுவனமான York Cinemas தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது.

https://x.com/yorkcinemas/status/2074973576835617107?s=20

York Cinemas வெளியிட்டுள்ள பதிவில், “Finally! Our Own Thalapathy Vijay is ready to set the big screen on fire with #JanaNayagan. Canada Release by York Cinemas. Igniting screens from July 24” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை 24-ஆம் தேதி ‘ஜன நாயகன்’ திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கனடா விநியோகஸ்தர் அறிவிப்பால் நம்பிக்கை

முதலில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டதாக போலியான தணிக்கைச் சான்றிதழ் சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் அது முற்றிலும் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது, தணிக்கைக் குழு கேட்ட திருத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டு, சான்றிதழ் பெறும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கனடா வெளியீட்டு அறிவிப்பு படத்தின் ரிலீஸ் விரைவில் உறுதியாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

6 மாத தாமதம்… விநியோக வணிகத்திலும் தாக்கம்

‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் நீண்டகால தாமதம் அதன் விநியோக வணிகத்தையும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் விநியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்பு செய்யப்பட்ட Minimum Guarantee (MG) ஒப்பந்தங்களை மாற்றி, புதிய விநியோக முறை குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல மாதங்களுக்கு முன்பே முதலீடு செய்திருந்த விநியோகஸ்தர்களுக்கு, எதிர்பாராத தாமதம் காரணமாக புதிய வர்த்தக நிபந்தனைகள் விளக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளியீடு தள்ளிப்போனதால், தமிழ்த் திரையுலகில் அதிகம் பேசப்பட்டு வரும் வெளியாகாத படங்களில் ஒன்றாக ‘ஜன நாயகன்’ மாறியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள ‘ஜன நாயகன்’, நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கு முன் அவர் நடித்துள்ள கடைசி திரைப்படமாக கருதப்படுகிறது. வெளியீடு தள்ளிப்போன நாள்முதல் படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் எப்போது அதிகாரப்பூர்வமாக உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவிக்கும் என்பதையே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here