Home சினிமா Prashanth: “இனி வருசத்துக்கு 4 படம்..” கோட் Mode-ல் அப்டேட் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த்!...

Prashanth: “இனி வருசத்துக்கு 4 படம்..” கோட் Mode-ல் அப்டேட் கொடுத்த டாப் ஸ்டார் பிரசாந்த்! – Kumudam

0


சென்னை: வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரசாந்த், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் செம மாஸ் காட்டி வந்தார். விஜய், அஜித் பிரபலமாகும் முன்பே 90களில் பல ஹிட் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. மணிரத்னம், பாலுமகேந்திரா, ஷங்கர் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள பிரசாந்த், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஃபீல்ட் அவுட் ஆனார். அதேநேரம் திருமண வாழ்க்கையிலும் பிரசாந்த் அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தார். 

இதனால் ஒருகட்டத்தில் தனது மனைவி கிரஹலட்சுமியை பிரிந்த பிரசாந்த், இப்போது வரை சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் விஜய்யின் கோட் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள பிரசாந்த், கோலிவுட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இரு தினங்களுக்கு முன்னர் கோட் ட்ரைலர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்துள்ளார் பிரசாந்த். 

முன்னதாக பிரசாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட் திரைப்படம் வெளியான பின்னர் பிரசாந்த் கேரியரில் கண்டிப்பாக மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், பிரசாந்துக்கு திருமணம் செய்து வைக்கவும் அவரது தந்தை தியாகராஜன் பிளான் செய்து வருகிறார். இந்த நிலையில் தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரசாந்த், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோட் நன்றாக வந்துள்ளதாக அப்டேட் கொடுத்த அவர், தனது கேரியர் குறித்தும் பேசினார்.

அதன்படி, இனிமேல் ஆண்டுக்கு 4 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட இயக்குநர்கள் என்றில்லாமல், அனைத்து இயக்குநர்களுடன் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். கோட் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிரசாந்துக்கு சில இயக்குநர்களிடம் இருந்து ஆஃபர்கள் சென்றதாக சொல்லப்பட்டது. அதில், இப்போதைக்கு 3 படங்களில் அவர் கமிட்டாகியுள்ளதாகவும், அந்தப் படங்கள் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. 

அதேபோல், விரைவில் பிரசாந்தை திருமணம் செய்யவுள்ளது யார் என்ற தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களின் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்த பிரசாந்த் பற்றி, 2கே கிட்ஸ்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கு கோட் படம் மூலம் பிரசாந்த் கெத்து காட்டுவார் என அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version