back to top
29.4 C
London
Monday, July 6, 2026
No menu items!
Homeசினிமாபார்வை ஒன்றே போதுமே.. உயிர் உலகம்.. கூடவே விக்கி நயன்தாரா குடும்பத்தின் க்யூட் படங்கள் -...

பார்வை ஒன்றே போதுமே.. உயிர் உலகம்.. கூடவே விக்கி நயன்தாரா குடும்பத்தின் க்யூட் படங்கள் – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


நடிகை நயான்தாரா விக்னேஷ் சிவனுடனான திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. பல ஆண்டுகள் காதலித்து டெஸ்டினேசன் திருமணம் செய்து கொண்டனர். பிரபல நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து கூறினர். அடுத்த சில மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா.உயிர், உலகம் என்று குழந்தைகளுக்கு பெயர் வைத்தனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியர். 

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022ஆம் ஆண்டு  ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் அதே ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, இரட்டை குழந்தைகளுக்கு தாங்கள் பெற்றோர் ஆன விஷயத்தை விக்னேஷ் சிவன் புகைப்படத்துடன் பதிவிட்டார். வாடகைத்தாய் முறை மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றிருந்தால் அதற்கான விதிகளை அவர்கள் முறையாக கடைப்பிடித்தார்களா என்று கேள்வி எழுப்பப் பட்டது. அதற்காக பல கட்ட விசாரணை நடைபெற்றது. 

அப்போதுதான் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த  11.3.2016 அன்றே பதிவு திருமணம் செய்தது தெரியவந்தது. அதற்கான சான்றிதழும் சமர்பிக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த தம்பதியிடம்  சினை முட்டை மற்றும் விந்தணு பெறப்பட்டு கரு முட்டைகள் உருவாக்கப்பட்டு உறைநிலையில் மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டது.பின்னர் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த கரு முட்டைகள் வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு இக்குழந்தைகள் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தை பிறந்தது. 

அந்த குழந்தைகள் அதே ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் குழந்தைகளை உயிராகவும் உலகமாகவும் கண் போல காத்து கொண்டாடி வருகிறார். படப்பிடிப்பில் பங்கேற்கும் நேரம் தவிர தனது குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுகிறார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அதனை புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைத்தள  பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் நயன்தாரா.

கோலிவுட், பாலிவுட் என பிசியாக இருந்தாலும் காலை நேரங்களில் கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகள் உயிர் உலகத்தோடு நடைபயிற்சி சென்றுள்ளார் நயன்தாரா. காதல் கணவரை ரொமான்ஸ் உடன் பார்த்த பார்வை ஆயிரம் கதைகளை சொல்கிறது. நயன்தாராவின் காதல் பார்வையை பார்த்த விக்னேஷ் சிவன் வெட்கப்பட்டு சிரிக்கிறார். 

அதே போல விக்னேஷ் சிவன் ஏதோ சொல்ல அதற்கு நயன்தாரா வெட்கப்பட்டு சிரிக்க அந்த பூங்காவே புன்னகை பூக்களால் மலர்ந்து சிரிக்கிறது. அந்த க்யூட் புகைப்படங்கள் தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.அன்பான மனைவியாகவும் பாசமான அம்மாவாகவும்  குடும்பத்தை கவனித்துக்கொள்கிறார் நயன்தாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here