Home சினிமா NEEK: மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகம் செய்த தனுஷ்… எஸ்ஜே சூர்யா கொடுத்த க்யூட் அப்டேட்!...

NEEK: மகன் யாத்ராவை சினிமாவில் அறிமுகம் செய்த தனுஷ்… எஸ்ஜே சூர்யா கொடுத்த க்யூட் அப்டேட்! – Kumudam

0


சென்னை: தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனைத்தொடர்ந்து தற்போது அமேசான் ப்ரைமில் வெளியான ராயன் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடமும் வரவேற்பு கிடைத்துள்ளது. ராயனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். பவர் பாண்டி, ராயன் வரிசையில் தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வெளியாகவுள்ளது. 

இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்களுக்கான லவ் ஸ்டோரியாக உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் 30ம் தேதி வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலில் பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளதாக எஸ்ஜே சூர்யா அப்டேட் கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஃபர்ஸ்ட் சிங்கிள் செம க்யூட். 

பிரியங்கா மோகனை மடிசார் மாமியாக ஆட வைத்து அமர்க்களம் செய்துள்ளார் தனுஷ். இந்தப் பாடலில் பிரியங்கா மோகனின் ராக்கிங் பெர்ஃபாமன்ஸ் சூப்பர். அதோடு இந்தப் பாடலை எழுதியுள்ள யாத்ராவுக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஃபர்ஸ்ட் சிங்கிளை எழுதியது தனுஷின் மகன் யாத்ரா தான் என்பது உறுதியாகியுள்ளது. ஹீரோவாக நடித்து வரும் தனுஷ், அவரது படங்களில் பாடல்கள் எழுதுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் தனுஷ் எழுதிய அடங்காத அசுரன் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது.

அதேபோல் தனது மகனையும் பாடலாசிரியராக அறிமுகம் செய்துள்ளார் தனுஷ். இதனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான பின்னர், யாத்ராவும் பிஸியாகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனுஷின் புதிய படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இப்படத்தின் திரைக்கதையை ரசிகர்கள் ரொம்பவே பாராட்டியிருந்தனர். 

மகாராஜா வெற்றியைத் தொடர்ந்து நயன்தாரா லீடிங் ரோலில் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் நித்திலன் சாமிநாதன். இந்தப் படம் மகாராணி என்ற டைட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நித்திலன் சாமிநாதன் இயக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இக்கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், தனுஷ் தற்போது நடித்து வரும் படங்கள் முடிந்ததும், இது தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version