back to top
17.1 C
London
Sunday, July 5, 2026
No menu items!
Homeஅரசியல்டாஸ்மாக் ஊழலுக்கு முடிவு? முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி...

டாஸ்மாக் ஊழலுக்கு முடிவு? முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



மக்கள் பணத்தில் ஒரு ரூபாயைக்கூட தொடமாட்டோம், தொட்டவங்களையும் விடவே மாட்டோம்’ என சட்டசபையில் முதல்வர் விஜய் முழங்கிய சூடு ஆறுவதற்குள், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் ரெய்டு தெறிக்கிறது.
அடுத்து எந்தெந்த மாஜி அமைச்சர்கள் குறி வைக்கப்படப்போகிறார்கள் என்ற பீதி தி.மு.க.வினரிடம் ஹெவியாகவே எழுந்துள்ள நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நமக்கு அளித்த ஸ்பெஷல் …

நடிகர் டு முதல்வர், ரசிகர் டு எம்.எல்.ஏ., அமைச்சர்கள்… இந்த மாற்றம் குறித்து?

“இது ஜனநாயகத்துக்கு கிடைச்ச வெற்றி. இதுவரை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உருவாகுறதே திட்டமிடப்பட்ட டிசைனா இருந்துச்சு. அரசியலில் செழித்தவர்களின் வாரிசுகளும், பணக்கார வீட்டுப் பிள்ளைகளும்தான் அமைச்சரானாங்க. அப்பா முதல்வர் மகன் மந்திரி, அப்பா மத்தியமைச்சர், மகன் மாநில அமைச்சர்னு அரசியல் பண்ணினாங்க, அந்த மரபை எங்க தலைவர் உடைச்சிருக்கார். தங்களுக்குள் ஒருவனாக இருந்து கிளம்புன டீமை அதிகாரத்தில் உட்கார வெச்சிருக்காங்க மக்கள்.”

பல நடிகர்கள் அரசியலில் சறுக்குனப்போ, விஜய் மட்டும் எப்படி சாதிச்சார்?

“அவங்களால ஏன் சாதிக்க முடியலைன்னு தெரியல. ஆனா, எங்க தலைவரை மக்கள் முழுசா நம்புறாங்க. அதுக்கு கிடைச்ச அங்கீகாரம்தான் இந்த ஆட்சி அதிகாரம். சினிமாவுல நம்பர் ஒன் இடத்தையும் கோடிக்கணக்கான வருமானத்தையும் விட்டுட்டு மக்களுக்காக வந்து நின்னார், வெயில்ல கருகினார். மாற்றத்துக்காக ஏங்கித் துடிச்சுக்கிட்டிருந்த மக்கள், ‘இவர் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரலை’னு நம்புனாங்க. ஜெயிக்கவும் வைச்சாங்க.”

மதுவிலக்கு துறையை கோவைக்காரரான உங்களுக்கு கொடுத்தது செந்தில்பாலாஜியை கடுப்பேத்தவா?

“யாரையும் கடுப்பேத்துறது, பழிவாங்குறதெல்லாம் தளபதி அரசாங்கத்துல கிடையாது. இந்தத் துறையை எனக்கு கொடுக்கும்போது முதல்வர் என்னை கூப்பிட்டு, ‘தம்பி இது கஷ்டமான டிபார்ட்மெண்ட் இதுல நிறைய லீகேஜஸ் இருக்கு. மக்கள் பணம் ஒரு ரூபாகூட எடுக்கமாட்டோம்னு சொல்லியிருக்கோம். நீ இந்த துறையை சரியா கொண்டுபோவேன்னு நம்புறேன். அதைக் காப்பாத்துனு சொன்னார். எனக்கு இந்த துறையக் கொடுத்ததன் பின்னணியில அவரோட நம்பிக்கை மட்டுமே இருக்கு”
‘பாட்டிலுக்கு பத்து ரூபா’னு அன்னைக்கு பாட்டு பாடிட்டு, இன்னைக்கும் அதே பிரச்னை தொடருதே?

“அநியாயம் என்னன்னா, டாஸ்மாக் ஆரம்பிச்சதிலிருந்தே பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குறாங்க. அந்த ஒவ்வொரு பத்து ரூபாயிலும் பெரிய பங்கு மேல்மட்ட அரசியல்வாதிகளுக்கும், சில அதிகாரிகளுக்கும், ரொம்ப கொஞ்சமா விற்பனையாளர்களுக்கும் போயிட்டிருந்துச்சு. ஆட்சி மாறியதற்குப் பிறகு இப்படி வாங்கவே கூடாதுங்கிறதுதான் முதல்வரின் கண்டிப்பான நிலைப்பாடு. ஒ ரு அதிரடி பிளானும் பிரச்னையைத் தயாராகுது. அதிகபட்ச விலை 150 ரூபாய்னு கொண்டு வர்றோம். அதன்பிறகு பத்து ரூபாய் இல்லை ஒத்த ரூபாய் வாங்குனாலும்கூட உயரதிகாரி முதல் விற்பனையாளர் வரை கடும் நடவடிக்கை பாயும்”

முதல்வர் விஜய்க்கு ‘தமிழகத்தில் பூரண மது விலக்கு’ அமல்படுத்தும் திட்டமிருக்கா?

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதுதான் முதல்வரின் உறுதியான இலக்கு. ஆனால், தடாலடியாக மதுவை தடை செய்ய முடியாது. அது பல பக்கவிளைவுகளை உருவாக்கும். ஆட்சிக்கு வந்தவுடனேயே கொத்தா பல கடைகளை மூடுன இந்த அரசு, நிச்சயம் மதுவிலக்கை நோக்கியும் நகரும்.”

சட்டசபையில ‘பார்ட்டி ஃப்ண்ட்’ என்கிற விஷயத்தையே முதல்வர்கிட்ட எடுத்துக் கொடுத்தது நீங்கதானே?

“இயல்பா நடந்த ஒரு விஷயம்தான் அது. முதல்வர் டாஸ்மாக் பத்தி பேச ஆரம்பிச்சதுமே நான் அலர்ட் ஆனேன். திடீர்னு திரும்பி ‘என்னபா அது?னு கேட்டதும் ஒரு செகண்ட் யோசிச்சுட்டு, ‘பார்ட்டி ஃபண்ட்’ விஷயத்தை சொன்னேன்.”

பார்ட்டி ஃபண்ட் புகாருக்கு ஆதாரம் இருக்கா?

“பார்ட்டி ஃபண்ட் யார் யாருக்கு போச்சு, போகலைன்னு சம்பந்தப்பட்டவங்களுக்கு நல்லாவே தெரியும். டாஸ்மாக் துறையில் ரொம்ப சைலன்டா ஆனா, தெளிவா பணத்தை விளாச அமைச் விக்னே அள்ளியிருக்காங்க. தேர்தலுக்கும் கட்சி நடத்தவும் இஷ்டத்துக்கு அதை பயன்படுத்தியிருக்காங்க. இதை முதல்வர்கிட்ட நான் சொன்னதும், ‘இதை முறைப்படுத்தி, சிஸ்டத்துக்குள்ளே கொண்டு வானு உத்தரவிட்டிருக்கார். ஆதாரம் இல்லாம சபையில் பேசும் பழக்கம் தவெ.கவுக்கு இல்லை.”

சினிமா ஷூட்டிங் மாதிரி ஆட்சி நடக்குதுன்னு சொல்றாங்களே?

“ஷூட்டிங், ஷூட்டிங்னு இதைத் தவிர வேறென்ன புகாரை எங்க மேல சொல்ல முடியும்? ஊழல், கமிஷன், அடாவடின்னு எதையும் சொல்ல முடியாது. ஒண்ணு சொல்லட்டுமா, எதிர்க்கட்சி வரிசையில அமர்ந்திருக்குற சில எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் அமரும் விதமும், அவர்களின் உடல்மொழியும் அதிர்ச்சி தருது. அதையெல்லாம் என்ன சொல்லி விமர்சிக்க? எதிர்க்கட்சிக்காரங்க எங்களை தகாத முறையில் விமர்சிக்கிறப்ப பதிலுக்கு நாங்க குரலை உயர்த்துனாக்கூட எங்க தலைவர் எங்களைத்தான் ‘ஏன்பா?’னு முறைக்கிறார்.”

டாஸ்மாக் துறை மாஜி அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி காலத்தில் நடந்ததாக சொல்லப்படும் ஊழல்கள்மீது ஆக்ஷன் உறுதி என பேசிக்கிறாங்களே? 

“சட்டம் மிக நிச்சயமா தன்னுடைய கடமையை செய்யும். அதுவும் மிக விரைவில்.” ஆட்சிக்கு ஆதவ், கட்சிக்கு புஸ்ஸி ஆனந்த்னு முதல்வர் ரொம்ப கூலா இருக்குறதா சொல்றாங்களே… தப்பான விமர்சனம்ங்க இது. துளியும் உண்மையில்ல. கட்சியிலயும், ஆட்சியிலயும் முதல்வருக்கு தெரியாம துரும்பும் அசையாது. முழு கன்ட்ரோலும் தளபதி கையிலதான் இருக்கு”

அரசியலில் கை சுத்தம் சாத்தியமா?

அரசியலுக்கு வந்தா கை சுத்தமில்லாம போகணுமா என்ன? பொதுவாழ்க்கையை ஊழலுக்கு பயன்படுத்துற கலாசாரம் புனிதமாதானே இருந்தாங்க. அதை மீட்டெடுக்கும். அதையும் மீறி நாங்க தப்பு பாசும் சமீபத்துலதானே வந்துச்சு. ஆரம்பத்துல மச்சர் தளபதியோட நிர்வாகப்படை நிச்சயம் னேஷ் பண்ணினா, தளபதி தட்டி தூக்கிடுவார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here