Home சினிமா NEEK : மடிசார் மாமியாகக் கலக்கிய பிரியங்கா மோகன்… ஹார்ட்டுகளை பறக்க விடும் நெட்டிசன்கள் –...

NEEK : மடிசார் மாமியாகக் கலக்கிய பிரியங்கா மோகன்… ஹார்ட்டுகளை பறக்க விடும் நெட்டிசன்கள் – Kumudam

0


தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். ராஜ்கிரண், ரேவதி. மடோனா செபாஸ்டியன் மற்றும் தனுஷ் ஆகியோர் நடித்திருந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அண்மையில் தனுஷ் இரண்டாவதாக தான் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் செம்ம ஹிட் அடித்து வசூல் சாதனை செய்தது. இது அவரது 50வது படம் என்பது கூடுதல் சிறப்பாகும். இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். 

இப்படி ரத்தம் தெறிக்க தெறிக்க எடுக்கப்பட்ட ‘ராயன்’ படத்துக்கு அப்படியே நேர்மாறாகத் தற்போது தனது புதிய படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். படத்தின் டைட்டிலுக்கு கிழ் “இது ஒரு வழக்கமான காதல் கதை” என்ற டேக் லைன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒரு சாஃப்ட்டான அழகான காதல் கதை கொண்டுள்ள இப்படத்தில் அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதில் கூடுதல் சிறப்பாக தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மற்றொரு பக்கம் பார்த்தால் தனுஷின் மகன் யாத்ரா, இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். 

அண்மையில் இப்படம் குறித்து பேட்டியளித்திருந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளதாகவும், எந்த பாடலை முதலில் ரிலீஸ் செய்வது என்று தெரியவில்லை எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், இப்படத்தில் இருந்து ‘கோல்டன் ஸ்பாரோ’ (golden sparrow) என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் சிறப்புத் தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார். தனது கியூட்னஸ்-ஆல் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக்கொண்ட பிரியங்கா மோகன், இந்த பாடலில் மடிசார் மாமியாக வந்து இளசுகளை சொக்க வைத்துள்ளார். தற்போது இந்த பாடலுக்கு நெட்டிசன்கள் தங்களது ஹார்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர். மிகவும் கலர்ஃபுல்லாக வெளியாகியிருக்கும் இந்த பாடலுக்கு அறிவு வரிகள் எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை சுப்லக்ஷினி, ஜீ.வி. பிரகாஷ் குமார், தனுஷ், அறிவு உள்ளிட்டோர் பாடியுள்ளனர். 

மேலும் படிக்க: கடுமையான காய்ச்சல்… ‘தக் லைஃப்’ படத்திற்காக உழைத்து ஓய்ந்து ஓடாக தேயும் சிம்பு!
 
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் பல ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ள தனுஷ் – ஜிவி காம்போ, இந்த படத்திலும் நிச்சயம் வெற்றியடையும் என ரசிகர்கள் ஆணித்தனமாகவே நம்புகின்றனர். இருப்பினும் படம் டாப் – ஆ? அல்லது ஃப்லாப்-ஆ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version