back to top
23.3 C
London
Saturday, July 4, 2026
No menu items!
Homeஅரசியல்DMK Ex-Ministers மீது Action Mode... அடுத்த Target யார்? - Kumudam

DMK Ex-Ministers மீது Action Mode… அடுத்த Target யார்? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



‘உப்பு தின்னவர் தண்ணீர் குடித்துத்தான் ஆகவேண்டும்’ என்ற பழமொழி இப்போது தி.மு.க. முகாமில் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ‘கட்டிங்’ வாங்கி குவித்த அமைச்சர்களை மோசடி மற்றும் ஊழல் புகார்கள் படு ஸ்பீடில் துரத்துவதுதான் இதற்குக் காரணம். குறிப்பாக, மாஜி

அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஷ் உட்பட ஐந்து பேர் இந்த லிஸ்ட்டில் இருப்பதாக சொல்லப்படுவதுதான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்!
இதுகுறித்த உள்விவரங்களை அறிந்த போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘தி.மு.க, மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகளை துரிதகதியில் முடுக்கிவிட்டிருக்கிறது தவெக அரசு. இந்த லிஸ்ட்டில் பல அமைச்சர்கள் இருந்தாலும் சில பெயர்கள்தான் முன்னணியில் இருக்கின்றன.

சென்னையைப் பொறுத்தவரை எல்லாமே சேகர்பாபுதான். இந்து சமய அறநிலையத்துறையை தாண்டி சென்னை மாநகராட்சி நிர்வாகம், சி.எம்.டி.ஏ ஆகியவையும் இவர் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. கோயில்நிலக் குத்தகை, நிலுவையில் கோடிக்கணக்கில் இருந்த கோயில் வாடகை, சென்னை நகரில் சாலை அமைக்கும் பணிகள், புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி தருவது என அனைத்திலும் நடந்த விளையாட்டுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும், தகுந்த ஆதாரங்களுடன் சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது அரசு. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் அதை விசாரிக்க தயாராக இருக்கிறது போலீஸ் டீம்!

இரண்டாவது இடத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் இருக்கிறார். இவருக்கு கார்த்திக், அருள் முருகன், பிரகாஷ், உமா சங்கர், முத்துக்குமார், தீபக், ராஜா தமிழ்மாறன் என மொத்தம் ஆறு உதவியாளர்கள். இவர்களில் கார்த்திக் அதிக முக்கியத்துவம் பெற்றவர். இவர் தனது சொந்த சகோதரியின் மகன் என்பதால், ‘மாப்பிள்ளை’ என்றே அழைப்பார்அன்பில். இவர்களையெல்லாம் தாண்டி கட்டிங்கை கொண்டுவந்து சேர்க்க ஏழு மீடியேட்டர்களை நியமித்திருந்தார் அன்பில் மகேஷ்.

அவர்களில் ஒருவரான பிடி அரசகுமாரைத்தான் ஜூன் மாதம் 27ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அரசகுமார், சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா தெருவில், டீலிங் பேசுவதற்காக தனி அலுவலகமே அமைத்திருந்தார். அங்கு டீல் முடிந்த பிறகு, தி.நகர் சாரங்கபாணி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் ‘கட்டிங்’ பெறப்படும். இந்த இரண்டு இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக விசாரணை வளையத்துக்குள் அன்பில் மகேஷ் கொண்டுவரப்படுவார் எனவும் சொல்லப்படுகிறது.

லிஸ்ட்டில் அடுத்ததாக இருப்பவர் மாஜி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர். தற்போது குன்னம் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் இவரிடம் அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியன் உதவியாளராக இருந்தார். அரியலூர் செங்குந்தபுரம் உயர்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி என, அடையாள அட்டையைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துவந்தார் இளஞ்செழியன்.

இவர்மீது, சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. சீனிவாசன், தன் மகனுக்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் உதவி என்ஜினியர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி இளஞ்செழியன் 27 லட்ச ரூபாய் வாங்கினார் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து இளஞ்செழியன் கைது செய்யப்பட்டார். அவர் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ‘நான் வாங்கிய 27 லட்ச ரூபாயில் 20 லட்ச ரூபாயை அமைச்சராக இருந்த சிவசங்கரிடம் கொடுத்தேன்’ எனக் கூறியிருக்கிறார். தொடர்ந்து மாஜி அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, அவர் விசாரணைக்காக கடந்த ஜூலை 1ம் தேதி நேரில் ஆஜரானார்.

அவரிடம் உதவி கமிஷனர் சீனிவாசலு விசாரணை நடத்தினார். அப்போது பல கேள்விகளுக்கு ‘தெரியாது’, ‘சரியாக ஞாபகம் இல்லை’ என பதில் அளித்துள்ளார் சிவசங்கர். ஆனாலும், இந்த குற்றச்சாட்டிற்கு அடிப்படை ஆதாரம் சிக்கும்போது கண்டிப்பாக சிவசங்கர் கைது செய்யப்படுவார் என உறுதியாக சொல்கிறது போலீஸ் சோர்ஸ். இவர்கள் தவிர அமைச்சர் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி இவர்கள் மீதும் தவெ.க. அரசின் பார்வை அழுத்தமாக பதிந்துள்ளது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதே தற்போதைய நிலவரம்” என சொல்லி முடித்தார்.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here