back to top
24.6 C
London
Saturday, July 4, 2026
No menu items!
Homeஅரசியல்திராவிடம் முடிந்ததா? தவெக வெற்றியால் சூடுபிடித்த புதிய அரசியல் விவாதம்! - Kumudam

திராவிடம் முடிந்ததா? தவெக வெற்றியால் சூடுபிடித்த புதிய அரசியல் விவாதம்! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



1967 ம் ஆண்டிலிருந்து 59 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள்தாம் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்திருக்கின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ புதிய கட்சிகள் தோன்றியபோதும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியை வீழ்த்த முடியாத நிலையில், அந்த வரலாற்றைத் திருத்தி எழுதியிருக்கிறது த.வெ.க. அரை நூற்றாண்டுக்குப் பிறகு திராவிடம் என்கிற பெயர் தாங்காத த.வெ.க., அரியணை ஏறியிருப்பது திராவிட சிந்தனையாளர்களிடம் எது மாதிரியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது?

30 ஆண்டுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வின் கட்டமைப்பையே சிதறியடிக்கும் வகையில் சிட்டிங் எம்.எம்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கு மிகுந்த பதவியில் இருந்தவர்கள் என கொத்துக் கொத்தாக த.வெ.கவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்துவருகின்றனர். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன் தொடங்கி பல்வேறு சுட்சிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் த.வெ.கவில் இணைந்துவருகின்றனர்.

இன்றைக்கு பலம்வாய்ந்த கட்சியாக தவெக முன்னிறுத்தப்படும் நிலையில், ‘திராவிடம் ஒழிந்தது’ என்கிற குரலும் மெல்ல தலைதூக்குகிறது. எனவே, இன்றைய புதிய அரசியல் சுழலில் சிக்கி நூற்றாண்டுகளைக் கடந்த திராவிட சித்தாந்தம் ஒழிந்துவிடுமா என்பதுதான் தற்போதுள்ள ஹாட் டாபிக்

இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம் ‘திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது. ‘திராவிடம் ஒழிந்தது என்று சொல்வதே முட்டாள்தனம். திராவிடம் என்கிற கருத்தியலை அடிப்படையாகக்கொண்டு 1906ம் ஆண்டிலிருந்து கடந்த 110 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களிலான கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டிருக்கின்றன. தமிழ்நாட்டை நீதிக்கட்சி 20 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது.

20 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட 80 ஆண்டுகாலம் தமிழ்நாட்டை திராவிட இயக்கங்களே ஆண்டிருக்கின்றன. த.வெ.க.வில்கூட பெரியாரைத்தான் முன்னிறுத்துகின்றனர். தேர்தலுக்கு முன்பு அவர்கள் திராவிடத்தை ஒழிப்பேன் என்று சொல்லியிருந்தால் நிச்சயமாக வென்றிருக்க மாட்டார்கள்.

இந்த ஒரு தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக திராவிடமே ஒழிந்துவிட்டது என்று சொல்வது முட்டாள்தனம்” என்றார்.அதிமுக செய்தித் தொடர்பாளரான கோவை சத்யனிடம் பேசினோம். “திராவிடம் ஒழிந்துவிட்டது என சொல்பவர்கள் திராவிடம் என எதைச் சொல்கிறார்கள். திராவிட இனமா இல்லை திராவிடக் கொள்கையா? திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களின் வாதம் இது. மூன்றுபுறமும் கடல் சூழ்ந்த இந்த நிலப்பரப்பை திராவிடம் என்று சொல்கிறோம். இந்த மண் சார்ந்த கொள்கைதான் திராவிடக் கொள்கை அதைக்கொண்டுதான் 32 ஆண்டுகள் அ.தி.மு.க. நல்லாட்சியைக் கொடுத்திருக்கிறது. அதிமு.க. செய்ததைத்தான் இன்று தவெகவும் பேசிக்கொண்டிருக்கிறது.

அவர்கள் தங்களை திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொள்வதில்லை அவ்வளவுதான். நிர்பயா பேட்ரோல்தான் பிங்க் பேட்ரோலாக மாறி தற்போது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையாக மாறியிருக்கிறது. பெயரை மாற்றுவதால் எதையும் அழித்துவிட முடியாது. திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொள்ளாத கட்சி ஆட்சிக்கு வந்ததால் திராவிடம் அழிந்துவிடாது” என்றார்.

கம்யூனிஸ்டுகள் இதற்கு என்ன சொல்கிறார்கள்? சி.பி.எம். மூத்த தலைவர் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “முக்கியமான இரு திராவிடக் கட்சிகளும் பெரும் பின்னடைவைச் சந்தித் திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் தனிப்பெரும் கட்சியாக தவெ.க. மகத்தான வெற்றிபெற்றிருக்கிறது. அதற்கு கடந்த ஆட்சியின் மீதான அதிருப்தியே முக்கிய காரணம்.

இந்த 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சி கண்டிருக்கிறது என்றாலும் நாளடைவில் திராவிடக் கட்சியினர் தங்களது போவிடம் கொள்கையை நீர்த்துப்போகச் செய்துவிட்டனர். தாராளமயக் கொள்கையை உயர்த்திப் பிடித்து கார்ப்பரேட்களுக்கு அதிக சலுகை வழங்கி, தூய்மைப் பணியாளர்களை வதைத்தது. சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தன ஒழிப்பு என எதுவுமே நிகழாதது என கடந்த ஆட்சி மீதான மக்களின் எதிர்ப்பே தவெகவின் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

திராவிடக் கட்சிகள் அல்லாத ஓர் ஆட்சி தமிழகத்தில் வந்திருப்பதற்கான காரணத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதே நேரம் இந்த ஒரு தேர்தலில் தோல்வியடைந்ததை வைத்து திராவிடம் ஒழிந்துவிட்டது என்பது ஏற்புடையதல்ல. திராவிடக் கட்சிகள் மீதான விமர்சனங்கள் தவறில்லை. சரியாக இருக்காது’ என்றார்.

திராவிட சித்தாந்தத்தை அழிக்க நினைப்பது பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமனோ, கடந்த 15 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளின் பெயர்களில் திராவிடம் இல்லை. நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். தேமுதிகவில் திராவிடம் இருந்தாலும் விஜயகாந்த் தேசியத்தை முன்னிறுத்தியிருக்கிறார். மக்களின் ஈர்ப்பைப் பெற மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

திராவிடத்தை முன் நிறுத்தியிருந்தால் விஜய் இத்தகைய வெற்றியை பெற்றிருக்கமாட்டார். த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக வென்றதற்கு தி.மு.க. ஆட்சி திரைக்கவர்ச்சியுமே காரணம்.  திராவிடம்  மீதான வெறுப்பும், விஜய்யின் த.வெ.சு.வால் ஏன் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை என்றால் அவர் தனது கொள்கைத் தலைவராக ஈவெராவை முன்னிறுத்தியதுதான். இருந்திருந்தால் தனிப்பெரும்பான்மை பெற்றிருப்பார்.

ஆகவே, திராவிடம் என்கிற பூமர் கொள்கையை எல்லாம் விஜய் புறந்தள்ள வேண்டும் அடையாள அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் வளர்ச்சி என்றார் அவரை முன்னிறுத்தாமல் சார்ந்து மட்டுமே சிந்திக்க வேண்டும்.”
புதிய மாப்பிள்ளையான தவெகவுக்கு மவுசு அதிகம்தான்…



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here