Home தமிழ்நாடு தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்… சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளிக்கு தொடர்பா? – Kumudam

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்… சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளிக்கு தொடர்பா? – Kumudam

0



தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சதி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், “தினமுகம்என்ற மாத இதழை நடத்தி வருவதாகவும், முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகையாளர் இவரே எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், எம்எல்ஏ இளையராஜாவை இருமுறை நேரடியாக தொடர்புகொண்டு, IPDS அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு சார்பில் பேசியது ராஜேஷ்தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், இந்த வழக்கில் தொடர்புடையவராக கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், நாடார் பாதுகாப்பு பேரவையின் மாநிலத் தலைவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

இந்த வழக்கில் கைதான நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவரும், அதிமுக பிரமுகருமான சீனிவாசன், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளி என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தவெக எம்எல்ஏ இளையராஜாவை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள IPDS அமைப்பின் திருநாவுக்கரசுடன் சீனிவாசன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நாடார் பேரவை தலைவராக உள்ள சீனிவாசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version