Home சினிமா Thalapathy 69… இசையமைப்பாளர் யார் தெரியுமா? தளபதிக்கு இவருதான் கரெக்டு… ரசிகர்கள் உற்சாகம்! – Kumudam

Thalapathy 69… இசையமைப்பாளர் யார் தெரியுமா? தளபதிக்கு இவருதான் கரெக்டு… ரசிகர்கள் உற்சாகம்! – Kumudam

0


கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாஸ் காட்டி வருகிறார் இளைய தளபதி விஜய். கடந்த 10 ஆண்டுகளில் விஜய்யின் விஸ்வரூப வளர்ச்சி, அவரை பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக மாற்றியுள்ளது. விஜய்யின் படங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் கோடிகளை வாரி குவிக்கின்றன.

மெர்சல், பிகில், பீஸ்ட், வாரிசு படங்கள் தலா 300 கோடி ரூபாய் வரை வசூலித்தன. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ, 600 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்தது. அதேபோல் கடந்த வாரம் ரிலீஸான விஜய்யின் கோட் திரைப்படம், இதுவரை 400 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 திரைப்படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Thalapathy 69 Movie Update) இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியது. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை, KVN புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதுவரை தெலுங்கு, கன்னட படங்களை தயாரித்து வந்த KVN புரொடக்ஷன்ஸ், முதன்முறையாக கோலிவுட்டிலும் தடம் பதிக்கிறது. அதிலும் விஜய் ஹீரோவாக நடிக்கும் அவரது கடைசிப் படத்தை தயாரிக்கவுள்ளது.

கோட் திரைப்படத்தின் பாடல்கள் சுமாராகவே இருந்ததாக தளபதியின் ரசிகர்கள் வேதனையடைந்து இருந்தனர். தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூட, எல்லோரும் அனிருத் இசைக்கு பழகிவிட்டனர் என்று தெரிவித்து இருந்தனர். இதனால், ‘தளபதி 69’ திரைப்படத்திற்கு யார் இசையமைக்கப்போகிறார் என்று தளபதியின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளது மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டு இருந்தது. மற்ற நடிகர், நடிகைகள் குறித்து, இதர டெக்னீஷியன் குறித்தோ எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘தளபதி 69’ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, தளபதி-அனிருத் கூட்டணியில், கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ, என தொடர்ச்சியாக 4 ஹிட் மியூசிக் ஆல்பங்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கி இருந்தனர். அதிலும், குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில், அனிருத் இசையில் வெளியான ‘அரபிக் குத்து; பாடல் 525 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் 5ஆவது முறையாக கூட்டணி அமைக்கவுள்ளதால், அடுத்த துள்ளல் இசைக்கு ரசிகர்கள் தயாராகி உள்ளனர். தளபதியின் கடைசி திரைப்படம் என்பதால், இதுவரை வழங்கிய ஹிட்டை விட, வெறித்தனமான ஹிட்டை கொடுப்பார் என்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், திரைப்படத்தின் கேப்ஷனாக ‘ஜனநாயகத்தின் ஒளி விளக்கு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அவரின், அரசியல் பிரவேசம் குறித்த சமிக்ஞையாக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சிலாகித்து வருகின்றனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், தளபதி 69 திரைப்படம் பற்றிய அஃபிஸியல் அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version